"மேனன்" என் அடையாளம்.. துறக்க மாட்டேன்.. "லட்சுமி" உறுதி!

By Sudha

சாதிப் பெயரை கூடவே கூட்டிச் செல்வது சிலருக்குப் பிடித்தமான விஷயம். எல்லாத் துறையிலும் இதுபோல நிறையப் பேர் இருக்கிறார்கள். சினிமாவும் அதற்கு விலக்கன்று.

சிலர் காலப் போக்கில் இந்தப் பெயர்களை விட்டு விடுவார்கள். சிலரோ புதிதாக சேர்த்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் ஒருபோதும் இதை விட மாட்டேன் என்று வம்படியாக சொல்வதும் உண்டு.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேரளத்துக்காரர்கள்தான் அதிக அளவில் சாதியை கூடவே வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். மற்ற மொழியினர் அவ்வளவாக இதை பிடித்துக் கொண்டிருப்பதில்லை.

நம்பியார் முதல்

நம்பியார் முதல்

அந்தக் காலத்திலேயே நம்பியார் தனது ஜாதிப் பெயரை கடைசி வரை விடவில்லை. உண்மையில் அவரது உண்மையான பெயரை விட இந்த நம்பியார் என்ற பெயர்தான் அனைவருக்கும் நல்ல பரிச்சயமாகவும் மாறிப் போனது. நம்பியார் என்பது, இது நாயர் சமூகத்தின் உட் பிரிவாகும்.

லேட்டஸ்ட் ரகளைகள்

லேட்டஸ்ட் ரகளைகள்

சமீபத்தில் சில கேரள நடிகைகளின் பெயருடன் ஒட்டியிருந்த ஜாதிப் பெயர்கள் சர்ச்சையைக் கிளப்பின. குறிப்பாக சில நடிகைகளின் பெயருடன் ஒட்டியிருந்த நாயர் உள்ளிட்ட ஜாதிப் பெயர்களை தமிழ்த் திரையுலகில் சிலர் பகிரங்கமாக எதிர்த்தனர். ஜாதிப் பெயரை நீக்கினால்தான் படத்தில் புக் செய்வோம் என்று கூட புரட்சிகள் கிளம்பின.

மேனனை உதறிய பார்வதி

மேனனை உதறிய பார்வதி

இந்த நிலையில்தான் சமீபத்தில் மரியான் பட நாயகி பார்வதி மேனன் தனது பெயருடன் ஒட்டியிருந்த மேனன் என்ற ஜாதிப் பெயரை உதறியுள்ளார். இதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூட அவர் கூறியுள்ளார்.

அதெல்லாம் முடியாது.. பிடிவாத லட்சுமி

அதெல்லாம் முடியாது.. பிடிவாத லட்சுமி

அதேசமயம், நடிகை லட்சுமி மேனன் தான் பெயரையெல்லாம் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். இது எனது அடையாளம். இதை நான் உதற வேண்டும் என்று அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார்.

சரி கெளதம் வாசுதேவ மேனன்....!

சரி கெளதம் வாசுதேவ மேனன்....!

இதேபோல மேனனுடன் வலம் வருபவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன். இவர் ஆரம்பத்தில் வெறும் கெளதம் என்ற பெயரில்தான் வலம் வந்தார். திடீரென தனது தந்தை மற்றும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொண்டார்.

இன்னும் நிறையப் பேர் இப்படி ஜாதிப் பெயருடன் வலம் வருகின்றனர். யாரெல்லாம் மாற்றப் போகிறார்களோ அல்லது யாரெல்லாம் மாறாமல் இருக்கப் போகிறார்களோ.. வேடிக்கை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X