»   »  எட்டுபேரை லவ் பண்ணேன்... கல்யாணம் பண்ணிக்க ஆசையில்லை: லட்சுமி மேனன்

எட்டுபேரை லவ் பண்ணேன்... கல்யாணம் பண்ணிக்க ஆசையில்லை: லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் பாவடை தாவணி கட்டி நடித்து போரடித்துபோன லட்சுமி மேனன் சமர்த்தாக படிக்கப் போய்விட்டார். மூன்றாண்டுகளில் ஜர்னலிஸ்ட் ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து வருகிறார் லட்சுமி மேனன்.

பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல கதாநாயகர்களுடன் டூயட் பாடி நடித்த லட்சுமி மேனன் இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுக்காத குறையாக படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அம்மணி பார்க்கத்தான் பச்சைப்புள்ளை என்று நினைத்தால் எட்டுபேரை லவ் பண்ணியிருக்கேன்... எல்லாமே போர் என்று அசால்டாக கூறுகிறார். வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், திருமணம் செய்து கொள்வதில் தனக்கு விரும்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரசிக கண்மணிகள்

ரசிக கண்மணிகள்

சுந்தரபாண்டியன், கும்கி பார்த்த போதே லட்சுமி மேனனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர்கள் தமிழக ரசிகர்கள். அதற்கேற்றார்போல அவர் எல்லா படங்களிலுமே குடும்ப குத்துவிளக்காக நடித்திருக்கிறார்.

காலேஜ் கேர்ள்

காலேஜ் கேர்ள்

படத்தில் நடித்தாலும் படிப்பு முக்கியம் என்று பி.ஏ., இங்கிலீஸ் படிக்கப் போய்விட்டார் லட்சுமி மேனன் படித்தாலும் விடாமல் காதலித்து அதை அவரே பிரேக் அப் செய்து விடுகிறாராம்.

லவ் பெயிலியர்

லவ் பெயிலியர்

சினிமாவுல மட்டும் இல்லை... நிஜத்துலயும் நிறையப் பேரைக் காதலிச்சிருக்கேன். எட்டு பேரைக் காதலிச்சிருக்கேன். ஆனா, எதுவுமே ரெண்டு மாசத்துக்கு மேல இருந்தது இல்லை. அதுக்குள்ள எனக்கு போர் அடிக்கும். நானே பிரேக்-அப் பண்ணிடுவேன்!''

ஜெயம் ரவி – சித்தார்த்

ஜெயம் ரவி – சித்தார்த்

'ஜிகர்தண்டா' படத்துல சித்தார்த் என்கிட்ட படத்துக்கு சம்பந்தம் இல்லாம மத்த விஷயங்கள் பேசும்போது, அப்படியே பறக்கிற மாதிரி இருக்கும். ஜெயம் ரவியையும் அவ்வளவு பிடிக்கும். ஆனா, என் பேட் லக். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு என்கிறார் சோகமாக.

அது சரி... சினிமாவில் அப்பாவியாக நடிக்கிற பொண்ணுங்களை நம்பக்கூடாது போலயிருக்கே!

English summary
Actress lakshmi menon talks about her love and marriage.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil