விமல் படத்தில் லட்சுமி மேனன் பாடிய குத்துப்பாட்டு
விமல் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் நடிகை லட்சுமிமேனன் குத்துப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் இப்போது குத்துடான்ஸ், லிப்லாக், குத்து டான்ஸ் என கோலிவுட் ட்ரெண்டுக்கு மாறிவருகிறார்.

இமான் இசையில்
விமல் நடிக்கும் ஒரு ஊருல ரெண்டு ராஜா என்ற படத்திற்காக இமான் இசையில் குத்துப்பாடல் ஒன்றை பாடியுள்ளார் லட்சுமிமேனன். முதன்முதலாக லட்சுமிமேனன் பாடிய பாடல், அவரையே ஆட வைத்துவிட்டதாம்.

மலையாளம் பாடல்வரிகள்
விமல்,சூரி, ப்ரியா ஆனந்த, விசாகா சிங் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் மலையாளம் கலந்து பாடல் வரிகளுடன் கூடிய ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது. எனவே இந்த பாடலை மலையாளம் தெரிந்த ஒருவர் பாடினால் நன்றாக இருக்கும். அதுவும் அறிமுக பாடகியாக இருந்தால் நல்லது என இந்த படத்தின் இயக்குனர் கண்ணன் எண்ணியிருந்தார்.

சிபாரிசு செய்த விமல்
இந்நிலையில் லட்சுமி மேனனுடன் மஞ்சப்பை படத்தில் நடித்த விமல், லட்சுமி மேனன் நன்றாக பாடுவார் என்றும், மஞ்சப்பை படப்பிடிப்பிற்கு இடையே அவர் சில மலையாள பாடல்களை பாடியதை தான் கேட்டிருப்பதாகவும் கூறவே, இயக்குனர் கண்ணனுக்கு லட்சுமி மேனனை பாட வைக்கும் ஐடியா பிடித்திருந்தது.

இமான் கொடுத்த தைரியம்
இதை இசையமைப்பாளர் இமானிடம் கூறியபோது அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் லட்சுமி மேனனிடம் இதுகுறித்து இயக்குனர் கண்ணன் பேசி சம்மதம் வாங்கினார். முதலில் தயங்கிய லட்சுமி மேனன் பின்னர் இமான் கொடுத்த தைரியம் காரணமாக பாடுவதற்கு ஒப்புக்கொண்டாராம்.

பாராட்டிய குழுவினர்
இந்த பாடலின் ஒலிப்பதிவு முடிந்ததும், லட்சுமி மேனன் மிகச்சிறப்பாக பாடியதாக இமான் மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

ரம்யா நம்பீசன்
இமான் ஏற்கனவே பாண்டியநாடு படத்தில் மலையாள நடிகை ரம்யா நம்பீசனை, பை பை பை என்று பாடவைத்தார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் மலையாள நடிகை லட்சுமி மேனனை பாடவைத்துள்ளார்.

புலம்பும் பின்னணிப் பாடகிகள்
இசையமைப்பாளர் இமானுக்கு மலையாளக்குரல்கள் மீது அப்படி என்ன ஈர்ப்போ தெரியலையே? இப்படியே போனால் எங்க வாய்ப்பு என்ன ஆகிறது என்கின்றனர் ஒரிஜினல் பின்னணிப் பாடகிகள்.


Click it and Unblock the Notifications











