'ஜிகிர்தண்டா’வில் இட்லிக்கடைக்காரி வேஷத்தில் குத்தாட்டம் போடும் லட்சுமிமேனன்
சென்னை: கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமி மேனன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜிகிர்தண்டா.
'பீட்சா'ப் புகழ் கார்த்திக் சுப்பையா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சித்தார்த் ஹீரோ, லட்சுமி மேனன் ஹீரோயின். சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் மதுரையிலும், அதன் சுற்றுவட்டாரத்திலேயுமே படமாகின்றன.
இப்பட அனுபவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள லட்சுமி மேனன் கூறியிருப்பதாவது...

இட்லிக்காரி...
ஜிகிர்தண்டாவில் இட்லி விற்கும் பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக, மதுரையில் பல இட்லிக் கடை பெண்மணிகளின் நடவடிக்கைகளை உள் வாங்கிக் கொண்டேன்.

கடின உழைப்பு...
என் கதாபாத்திரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துள்ளேன். இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது சவாலாகவும், அதே சமயத்தில் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

மதுர குலுங்க..
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மற்றும் பாடல்கள் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே நடப்பதால், அப்பகுதி பெண்ணாகவே மாற முயற்சி செய்துள்ளேன்.

குத்துப்பாட்டு...
சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நான் ஒரு குத்துபாட்டுக்கு ஆடியுள்ளேன். குத்துப்பாட்டுக்கு ஆடுவது இதுவே முதல் முறை. அப்பாடலும் மதுரையிலேயே படமாக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.

சிப்பாய்...
தற்போது, கௌதம்கார்த்தியோடு ‘சிப்பாய்' படத்திலும் லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











