twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பெண்ணிய' போராளியான நடிகை லட்சுமி மேனன்... பேஸ்புக்கில் அதிரடி

    By Mayura Akilan
    |

    சென்னை: பெண்ணின் நடை எப்படி இருக்கவேண்டும் என்று கூட இன்றைக்கு ஆண்கள் தீர்மானிக்கின்றனர். பெண்கள் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தீர்மானிக்க ஆண்களுக்கு யார் சுதந்திரம் கொடுத்தது என்று தெரியவில்லை. கடந்த ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா விவாதம் பார்த்த பிறகு பெண்களுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் பதிவிடுகின்றனர் ஆண்கள். அதுவும் நமீதா என்ற பெண், பேசியதைக் கேட்ட ஆண்கள் அந்த பெண்ணை கண்டபடி திட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தனது முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதற்கு சரியான புகைப்படங்களாக அமைந்துள்ளது அவை.

    நீயா நானாவில் பேசிய நமீதாவோ, நான் கர்ச்சீப்பை கட்டிக்கொள்கிறேன், அல்லது வேறு எதை வேண்டும் என்றாலும் கட்டுகிறேன். அதெல்லாம் வேற யார் பிசினசும் கிடையாது. ஒரு பொண்ணா இருந்து நான் எனக்கு பிடிச்ச முடிவை எடுப்பேன்.

    நாங்க பப்புக்கு போனா உங்களுக்கு (ஆண்களுக்கு) என்ன பிரச்சினை? என் சேலைக்கும் இடுப்புக்கு நடுவேயான, 6 செமீ இடைவெளி கலாசாரம். ஆனால், சட்டை-பேண்ட் நடுவேயுள்ள 1 இஞ்ச் ஆபாசமா? நாங்க (பெண்கள்) தண்ணியடிச்சா உங்களுக்கு என்ன? உங்களுக்கு சரக்கு பற்றாக்குறையாகிவிடுமா?என்று கேட்டார்.

    இதைப் பார்த்து கொதித்துப் போன ஆண்கள் சகட்டு மேனிக்கு பதிவிட்டனர். எந்த மாதிரி ஆடை அணியவேண்டும் என்பது தொடங்கி அட்வைஸ் மழையை ஓசியாக கொடுத்து வருகின்றனர். அவர்களைப் போன்றவர்களுக்காகவே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் லட்சுமி மேனன். அவற்றை சிலர் நீக்கிவிடவே, யாரோ இந்தப் பதிவை என் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்... எவ்வளவு தைரியம் எனக் கேட்டுள்ளார் லட்சுமி மேனன்.

    தனியாக இருக்கும் பெண்

    தனியாக இருக்கும் பெண்

    ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் அது வாய்ப்பல்ல , அது ஒரு பொறுப்பு என்று பொருள்படும்படியான புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் லட்சுமி மேனன்.

    உங்கள் மகளிடம் பாதுகாப்பு குறித்து பேசும் அதே தருணம் உங்கள் மகனிடம் அப்படியே சத்தியம் வாங்குங்கள் (அவனால் பெண்களுக்கு எந்த பாதிப்பும் வராது என)

    என் வாழ்க்கை என் இஷ்டம்

    என் வாழ்க்கை என் இஷ்டம்

    என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.என் மனம் சொல்லும் படி கேட்டு எனக்கு பிடித்தாற் போல் நடக்கிறேன் அதற்காக நான் பிரச்னையை உருவாக்கும் கிளர்ச்சியாளர் என அர்த்தம் அல்ல என்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

    ஆடை என் சுதந்திரம்

    ஆடை என் சுதந்திரம்

    என்னால் ஜீன்ஸ், ஷர்ட் அணிய முடியும், என் கூந்தலை குட்டையாக வெட்டிக்கொண்டு ஒரே கல்பில் ஒயின் குடிக்க முடியுமெனில் நான் எனது கோட்டைத் தாண்டுகிறேன் என அர்த்தமில்லை.

    அட்வைஸ் வேண்டாமே

    அட்வைஸ் வேண்டாமே

    இந்த வாசகங்கள் அடங்கிய பெண்களின் அந்தப் புகைப்படம் பெண்களும், ஆண்கள் போல் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆறறிவு உள்ளது. வகுப்பெடுக்க அவசியம் அல்ல என்பதை உணர்த்துகிறது.

    எதிர்வினை

    ஐ.டி கேர்ள்ஸ் எல்லாம் மனைவியாக இருக்க ஒத்து வராது என்பது போல பலர் பதிவிடவே, ஒரு சிலரோ நமீதாவின் இடி பேச்சை கேட்டு இப்படியும் போட்டனர்.

    English summary
    Lakshmi menon posts some photos on her Face book pages. somebody removed that posts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X