'லக்கி' லட்சுமி மேனன் கவர்ச்சிக்கு மாறுகிறார்!
சென்னை: நடித்த நான்கு படங்களுமே ஹிட் அடித்த காரணத்தால் லக்கி நடிகை என்று பெயரெடுத்துள்ளார் லட்சுமி மேனன். தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாவே வருவதால் குடும்ப குத்துவிளக்கு தோற்றத்திலிருந்து கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்து விட்டாராம்.
இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறராம் லட்சுமி மேனன். கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.
குடும்ப பெண் போல் இருப்பதால்தானே அதே பாணியில் படங்கள் வருகிறது. எனவே தோற்றத்தை மாடர்னாக மாற்றிக்கொண்டால் வேறு கதைகளில் நடிக்கலாமே என்று தோழிகள் ஐடியா கொடுத்துள்ளனர்.

4 படமும் ஹிட்
லட்சுமி மேனன் ஏற்கனவே நடித்து வெளியான சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு ஆகிய நான்கு படங்களுமே ஹிட் ஆகியுள்ளன. அதனால் அதிர்ஷ்ட நாயகி என்ற பெயரும் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது.

எகிறிய சம்பளம்
பாண்டிய நாடு வெற்றிக்குப் பின்னர் லட்சுமி மேனன் சம்பளமும் உயர்ந்து விட்டது. இதனைத் தொடர்ந்து அவர், ஜிகர்தண்டா, சிப்பாய், மஞ்சப்பை, வசந்த குமாரன், விஜய் சேதுபதியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். எல்லாமே குடும்பப் பாங்கான தோற்றம்தானாம்.

ஜிம்மே கதி
இதனையடுத்து தனது தோற்றத்தை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள தினமும் ஜிம்முக்கு செல்கிறார். இப்போதெல்லாம் ஷூட்டிங் முடிந்தால் நேராக வீட்டுக்கு செல்லாமல் ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் லட்சுமி மேனன்.

எல்லை மீறமாட்டேன்.
ஏற்கனவே லட்சுமி மேனனிடம் கவர்ச்சி வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா? என்றதற்கு, எந்தளவுக்கு எல்லையோ அதை எப்போதும் மீறமாட்டேன்‘ என்றார்.

தவறு இல்லையே
திட்டுமிட்டு கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று நடிக்க மாட்டேன் அதே சமயம் காட்சிக்கு தேவையாக அளவிற்கு கவர்ச்சியாக நடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் கூறியிருந்தார் லட்சுமி மேனன்.

கொஞ்சம் கவர்ச்சி
அவர் சொன்னது போல பாண்டியநாடு படத்தில் கொஞ்சமே கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார்.

தனுஷ் ஜோடியாக
பாண்டியநாடு படத்தை தொடர்ந்து மீண்டும் விஷால் ஜோடியாக நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கும் லட்சுமிமேனன் விரைவில் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதில் மாறுபட்ட லட்சுமி மேனனை ரசிகர்கள் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











