அஜீத் படம்னா சம்பளமே வாங்க மாட்டேன்: லக்ஷ்மி மேனன்
சென்னை: அஜீத் குமார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.
சுந்தர பாண்டியன், கும்கி ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் கேரளத்து அழகி லக்ஷ்மி மேனன். அவர் தற்போது சசிகுமாருடன் சேர்ந்து குட்டிபுலி படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் ஏற்கனவே ஜோடி சேர்ந்த சுந்தர பாண்டியன் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்கியில் லக்ஷ்மி மேனனின் நடிப்பு பாராட்டப்பட்டது.

சூர்யா தான் பிடிக்கும்
லக்ஷ்மி மேனனுக்கு பிடித்த நடிகர் என்றால் அது சூர்யா தான்.

அஜீத்னா சம்பளமே வேண்டாம்
அஜீத் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் சம்பளமே வாங்காமல் நடிப்பேன் என்று கூறியுள்ளார் லக்ஷ்மி மேனன்.

10ம் வகுப்புத் தேர்வு
10ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள லக்ஷ்மி மேனன் கண்டிப்பாக நல்ல மதிப்பெண் வாங்குவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications