லாரன்ஸ் படம்... அனுஷ்காவுக்கு பதில் லட்சுமி ராய்!
லாரன்ஸ் இயக்கும் தெலுங்குப் படம் காஞ்சனாவிலிருந்து விலகிக் கொண்டார் முன்னணி நடிகை அனுஷ்கா.
தெலுங்கில் அனுஷ்கா - லட்சுமிராய் நடிக்க காஞ்சனா என்ற படத்தை இயக்கி வருகிறார் லாரன்ஸ். இவர் ஏற்கெனவே மூன்று வெற்றிப் படங்களை தெலுங்கில் தந்துள்ளார்.
காஞ்சனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் அனுஷ்கா. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தப்படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், "அனுஷ்கா விலகிவிட்டது உண்மைதான். இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போது அவருடைய கேரக்டரில் லட்சுமிராய் நடிக்கிறார். ஹிந்தியில் பிஸியாக இருக்கும் அவர், நட்பின் காரணமாக கால்ஷீட் ஒதுக்கித் தந்துள்ளார். மேலும் ஒரு புதிய கேரக்டர் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தெலுங்கில் 'ரெபல்' என்ற படத்தை இயக்குகிறேன். காஞ்சனாவில் விலகினாலும், ரெபலில் அனுஷ்கா நடிக்கிறார். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இயக்க மட்டுமே செய்கிறேன். இது ஆக்ஷன் படம். அடுத்து தமிழில் ராசுமதுரவன் இயக்கத்தி ஒரு படம் நடிக்கிறேன்...,'' என்றார்.


Click it and Unblock the Notifications











