ரவி தேஜாவுடன் குத்தாட்டம் போடும் லட்சுமிராய்
ஐதராபாத்: நடிகை லட்சுமிராய் தெலுங்கு படமான பலுபுவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.
கோபிசந்த்தின் இயக்கத்தில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலியும், ஸ்ருதியும் ஹீரோயினாக நடிக்கிறார்கள்.
சமீபத்தில் நடுக்கடலில், 'கேக்' வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய லட்சுமிராய், இனி, தெலுங்கு ரசிகர்களின் மனதில் கேக் வெட்ட போகிறாராம்.

பெங்களூரு தக்காளி...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியுடன் இணைத்து பேசப்பட்டவர், நடிகை லட்சுமிராய். இவர், பெங்களூரை சேர்ந்தவர்.

கைவிட்ட குரு...
'ஒன்பதுல குரு' கைவிட்டதால் லட்சுமிராய் தற்போது தனது கவனத்தை தெலுங்கு பக்கம் திருப்பியுள்ளார். இதற்காக பெரும் தொகை கைமாறி உள்ளதாம்.

பாடி வா...ஆடி வா...
'பலுபு' படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் கலக்க இருக்கும் லட்சுமிராய், ரவி தேஜாவுடன் ஒரு பாடலில் நடனமாடுகிறாராம்.

பெரிய படம்...
மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை பிவிபி சினிமா சார்பில் வி.போட்லுரி தயாரிக்கிறார். இசை எஸ்.எஸ்.தமன்.


Click it and Unblock the Notifications











