»   »  கிண்டல் செய்து காயப்படுத்துகின்றனர் - கண்ணீர் விட்டு அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்

கிண்டல் செய்து காயப்படுத்துகின்றனர் - கண்ணீர் விட்டு அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர் ஜே பாலாஜி உடனான பிரச்சினை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விடாது கறுப்பாக தொடர்ந்து வருகிறது. ஆளை விடுங்கப்பா என்று சமூக வலைத்தளத்தை விட்டு விலகினாலும் தொடர்ந்து கிண்டலடிக்கின்றனர் என்பது லட்சுமி ராமகிருஷ்ணனின் புகார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து, மீம்ஸ் தயாரித்து என தொடர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நிகழ்ச்சி வைத்தும், பாட்டு பாடியும் கிண்டலடித்தனர்.

சிவகார்த்திக்கேயனுடன் சண்டை

சிவகார்த்திக்கேயனுடன் சண்டை

இதற்காக விஜய் டிவியுடனும், சிவகார்த்திக்கேயனுடனும் சண்டை போட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த பிரச்சினை ஓய்ந்த பின்னர் மீண்டும் ஜீ டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கலாய்ப்பு நிகழ்ச்சி

கலாய்ப்பு நிகழ்ச்சி

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இதே போன்ற ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியை வைத்து கலாய்த்தனர். இந்த படத்தில் தன்னை கலாய்த்து காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி மீது குற்றம் சாட்டினார்.

ஆர். ஜே. பாலாஜி

ஆர். ஜே. பாலாஜி

இதற்கு ஜிவி பிரகாஷ் குமார், ஆர் ஜே பாலாஜி, இயக்குநர் பாலாஜி ஆகியோர் பதிலளித்தனர். டுவிட்டரில் இந்த பிரச்சினையால் கடும் சண்டை மூண்டது. இதனால் டுவிட்டரை விட்டே வெளியேறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கண்ணீர் விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வருவது மிகுந்த மனவருத்தத்தை தந்திருப்பதாக கூறியுள்ளார். இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஆர் ஜே பாலாஜியின் செயல்பாடுகள் பற்றி காட்டமாக பேசிய அவர், ஒரு கட்டத்தில் அழுதேவிட்டாராம். தொடர்ந்து தன்னை கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் வைப்பது தன்னை மிகவும் காயப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

English summary
Lakshmi Ramakrishnan Angry Reply to RJ Balaji and crying the interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil