கமலிடம் காதல் சொன்ன விவகாரம்.. நாகரீகமற்றது.. காட்டமான லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: கோலிவுட்டில் பல திறமைகளின் முகங்களை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், 'கமலிடம் காதலை சொன்னேன் அப்போது என்னை தங்கை என அழைத்துவிட்டார்' என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அவர் விளக்க்மளித்திருக்கிறார். அது ட்ரெண்டாகியிருக்கிறது.

கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் சினேகாவுக்கு தாயாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு தமிழ்நாட்டில் கவனம் வைப்பவர்கள் இருக்கிறார்கள். நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் தனது தடத்தை ஆழமாகவே பதித்திருக்கிறார்.

லட்சுமி இயக்கிய படங்கள்: அதன்படி அவர் முதலில் ஆரோகணம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் சரியாக போகவில்லை. இருப்பினும் தொடர்ந்து, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர், ஆர் யூ ஓகே பேபி ஆகிய படங்களை இயக்கினார். அவர் நடிகையாக ஜொலித்ததுபோல் இயக்குநராக பெரிதாக வெல்ல முடியவில்லை. தற்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திவருகிறார்.

சொல்வதெல்லாம் உண்மை: நடிகையாக அவர் பெற்ற பிரபல்யத்தைவிடவும் அதிக பிரபல்யம் கொடுத்தது என்றால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. தனியார் சேனல் ஒன்றில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள்வரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் அவர் கூறும், 'என்னம்மா இப்படி பண்றீங்களே ம்மா' என்ற வாசகம் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனது. அதேசமயம் அதனை வைத்து அவரை பலரும் கலாய்க்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் அவைகளை எளிதாக கையாண்டுவிடுவது அவரது சிறப்புகளில் ஒன்று.

Lakshmi Ramakrishnan has explained confessing her love to Kamal Haasan

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: இப்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அந்த நிகாழ்ச்சியில் அவர் பேசுக்க்கொண்டிருக்கும்போது எதார்த்தமாக, கமல்ஹாசனிடம் காதலை சொன்ன விஷயம் குறித்து அவர் அந்நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதாவது அவர் தனது பேச்சில், "கல்லூரியில் படிக்கும்போதிருந்தே நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகை. அதுமட்டுமின்றி அவரை காதலிக்கவும் செய்தேன். சினிமாவுக்கு வந்த பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது மனதில் இருந்த காதலையும் அவரிடம் சொன்னேன். ஆனால் அவரோ தங்கை என கூறிவிட்டார்" என்றார்.

வந்த விளக்கம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கமளித்திருக்கிறார். அவர் அளித்த விளக்கத்தில், "எனது சகோதரி மாதிரி உள்ளீர்கள் என்று சொன்னதும்; எனது நண்பர்கள் நகைச்சுவையாக கலாய்த்தார்கள். இதனைத்தான் நான் அந்த நிகழ்ச்சியில் ரசித்து பகிர்ந்தேன். இதனை தவறாக புரிந்து, செய்தியாக மாற்றி பரப்பும் செயல் நியாமற்றதும், நாகரிகமற்றதும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X