விஜய், சங்கீதா விவகாரம்.. சீனியர் நடிகை இப்படி நெத்தியடியா அடிச்சிட்டாங்களே.. ஓபனாக பேசிட்டாங்க
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருக்கும் விஷயமும்; திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வந்த விஷயமும் கோலிவுட்டில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களுமேகூட அவருக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அனைத்துக்கும் மேலே இந்தப் பிரச்னை அவ்வளவு வொர்த் கிடையாது என தளபதி சொன்னதையும் அவர்கள் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத விஷயம் ஒன்று கடந்த மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. அதாவது, 'விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். எவ்வளவோ சொல்லி பார்த்தும் இரக்கமே இல்லாமல் அந்த நடிகையுடன் உறவினை தொடர்ந்தார். கடந்த ஐந்து வருடங்களாகவே அவர் என்னுடன் சேர்ந்து வாழவில்லை. நடிகையுடனான உறவை தட்டி கேட்டதன் காரணமாக அவர் என்னை சுதந்திரமாக நடமாடவில்லை. பொருளாதார ரீதியகாவும் முடக்கினார். அவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

உள்ளே வந்த திரிஷா: சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை கண்டிப்பாக திரிஷாவாதான் இருக்கும் என சந்தேக பார்வையோடு பலரும் இருந்த சூழலில்; அதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடனேயே ஒரே காரில் ஒரே நிறத்திலான உடையை அணிந்தபடி விஜய் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார். அப்போதிருந்து விஜய் - சங்கீதா என்று இருந்த இவ்விஷய்ம்; விஜய் - சங்கீதா - திரிஷா என மாறியது. அனைவருமே திரிஷாவையும், விஜய்யையும் கழுவி கழுவி ஊற்றிவருகிறார்கள்.
வொர்த் இல்லையா ப்ரோ?: நேற்று நடந்த தவெக மகளிர் அணி கூட்டத்தில் பேசியபோதுகூட; சங்கீதாவை நினைத்து கொஞ்சமும் வருத்தப்படாமல்; இதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை. நீங்கள் ஃபீல் செய்யாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என அலட்சியமாக பேசினார் விஜய். அதற்கும் கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் அவருக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் பலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் விவகாரம் குறித்து சீனியர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
லட்சுமியின் பதிவு: அவர் தனது பதிவில், "விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும், அவரது அரசியல் வருகை குறித்தும் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவரை நான் ஒரு மரியாதையான, அமைதியான, மென்மையான நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறேன். அவருடைய தாய் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது. அதற்கும் மேலாக எனக்கு எந்த தனிப்பட்ட அறிவும் இல்லை. சமீபத்தில் ஒரு மேடையில் நான் பேசிய வார்த்தைகள் தாராக புரிந்துகொள்ளப்பட்டன. அதனை இப்போது நடந்துகொண்டிருக்கும் விஜய்யின் தனிப்பட்ட விஷயத்தோடு கனெக்ட் செய்கிறார்கள். அது தவறானது.
உண்மையான அக்கறை: அதாவது ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டது. அதற்கு நானோ மக்கள் தனிப்பட்ட விஷயங்களையும், அரசியல் செயல்பாடுகளையும் தனித்தனியாக பார்க்க தெரிந்தவர்கள் என்றுதான் நான் கூறினேன். இது தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயம் அளவுக்கு மீறி பெரிதாக்கப்படுகிறது என்று கூறினேன். இன்னும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பெண்களின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் நீதிக்காக போராட வழியில்லாமல், சட்ட உதவியோ பொருளாதார ஆதரவோ இல்லாமல் அடுத்த வேளை உணவுக்குகூட உறுதி இல்லாமல் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே அளவு கவனத்தை செலுத்த வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications















