»   »  தெலுங்குக்குத் தாவிய லஷ்மி ராய்

தெலுங்குக்குத் தாவிய லஷ்மி ராய்

Subscribe to Oneindia Tamil

தமிழில் அலசி அள்ளாடிப் பார்த்தும் ஒரு வாய்ப்பும் ஓடி வராததால், கடுபபாகிப் போன லஷ்மி ராய் இப்போதுதெலுங்குக்குத் தாவி விட்டார்.

கற்க கசடற என்ற படம் மூலம் சித்தம் பொடிபட கிளாமர் கோதாவில் குதித்தார் லஷ்மி ராய். முதல் படத்திலேயமுங்கி பொங்கியதால், அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளிலும் கிளாமருக்கே அதிக முன்னுரிமை கொடுத்தார்கள்இயக்குநர்கள்.

இதனால் லஷ்மி ராய் நடித்த அத்தனை படங்களிலுமே ஆடைக் குறைப்பு அமோகமாக இருந்தது. சமீபத்தில்வெளியான தர்மபுரி படத்தை பெரிதாக நம்பியிருந்தார் ராய். ஆனால் அது ராவி விட்டு விட்டதால், அப்செட்ஆகி விட்டார்.

தமிழ் போனால் என்ன இருக்கவே இருக்கிறது தெலுங்கு என மனதை தேற்றிக் கொண்ட அவர், தெலுங்குக்குத்தாவி விட்டார். லஷ்மி ராயின் முயற்சியால் சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். இங்கும் கிளாமரே முதலீடுஎன்றாலும் கூட முதலில் போட்டு அப்புறமா எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கிளாமருக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார் லஷ்மி ராய்.

தமிழுக்கும், தெலுங்குக்கும் கிளாமரில் பெரிய வித்தியாசம் இருப்பதாக இப்போது தத்துவார்த்தமாக பேசுகிறார்ராய். அப்படி என்ன விசேஷ வித்தியாசம் என்றால், தமிழில் கிளாமர் என்றாலே அது கவர்ச்சிதான். ஆனால்தெலுங்கில் கதைக்குப் பொருத்தமாக, படு அழகாக காட்டுவார்கள் (ஓஹோ!). எனவே தான் தெலுங்கில் கவர்ச்சிஎன்றாலும் நான் ஆட்சேபிக்கவில்லை என்கிறார் ராய்.

எப்படியோ, கிளாமர் காட்டினால்தான் பப்பு வேகும் என்றாகி விட்டது. அதை எங்கே காட்டினால் என்ன.எப்படியானாலும் ராய் நடிக்கப் போகும் தெலுங்குப் படங்கள் டப் ஆகி தமிழுக்கும் வரத்தான் போகிறது. அப்பபார்த்துக் கொள்ளலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil