»   »  அலையடித்த லஷ்மி ராய்!

அலையடித்த லஷ்மி ராய்!

Subscribe to Oneindia Tamil

ஜெமினி, லஷ்மி ராய் இணைந்து நடித்துள்ள நெஞ்சைத் தொடு படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில்நடந்தது.

புதுமுக நாயகன் ஜெமினியும், கிளாமர் இளவரசி லஷ்மி ராயும் சேர்ந்து பின்னி எடுத்துள்ள படம் நெஞ்சைத்தாடு. லண்டனைச் சேர்ந்த டாக்டர் சிவக்குமார் என்பவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் லஷ்மி ராயின் கிளாமர் காட்சிகள்தான் முக்கிய ஹைலைட்டாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரும், ஜெமினியும்சேர்ந்து கொடுத்துள்ள ஒரு சூப்பர் முத்தம் தான் படு பரபரப்பாக பேசப்படுகிறது.

படு சூடான இந்த முத்தத்தை படமாக்க 8 டேக்குகள் வாங்கினாராம் ஜெமினி. உணர்ச்சிப்பூர்வமாக வரட்டுமே என்றுஅவர் கூறியதால் 8 முறை டேக் வாங்கிய பின்னர்தான் முத்தம் ஓ.கே. ஆனதாம்.

வால்பாறை அருகே இந்த முத்தக் காட்சியை படமாக்கினர். இருவரும் அழுதபடி உதட்டோடு உதடு பொருத்திகொடுத்துள்ள இந்த முத்தக் காட்சி படத்துக்கே முக்கியமானதாம்.

படத்தின் கதைப்படி ஹீரோ ஜெமினி, சிறு வயதிலிருந்தே அன்புக்காக ஏங்குபவராம். படத்தின் முக்கிய கிளைமாக்ஸ்பாடலின்போது அவரும், லஷ்மி ராயும் முத்தம் கொடுத்துக் கொள்வது போல காட்சியாம். அதைத்தான் வால்பாறையில்படமாக்கினார்களாம்.

இந்த முத்தம் அன்பு முத்தம், பாச ஊற்று பெருக்கெடுத்ததால் வந்த முத்தம், இதில் காமம் தெரியாது, காதல்மட்டுமே இருக்கும் என்று முத்தத்திற்கு விளக்கம் கொடுக்கிறார் இயக்குநர் ராஜ்கண்ணன்.

இப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான காட்சியைக் கொண்ட நெஞ்சைத் தொடு படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. படு கிராண்டாகவும், கிளாமராகவும் விழா நடந்தது.

படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவாதான் இசை. குத்துப் பாட்டுக்களுக்கு பின்னி எடுத்துள்ளாராம். விவேகா, கண்னியப்பன்ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். 3 குத்துப் பாட்டுக்கள் படத்தில் உள்ளன, ஒரு மெலடி பாடலும் உள்ளது.

பாடல்களிலும், இசையிலும் பெரிய அளவில் புதுமை இல்லை என்றாலும் கூட, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ரசிக்கவைக்கிறது.

படத்தை இயக்கியுள்ள ராஜ்கண்ணன், பாக்யராஜின் உதவியாளராக இருந்தவராம். எனவே அவரது பாணி டச், படத்தில்நிச்சயம் இருக்கும் என நம்பலாம்.

படத்தில் லஷ்மி ராய் மாடல் அழகியாக வருகிறார், ஜெமினி கிரிக்கெட் வீரராம். இருவருக்கும் இடையே மலரும்காதல்தான் இந்த நெஞ்சைத் தொடு.

பாடல் கேசட் விழாவுக்கு வந்திருந்த லஷ்மி ராய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காரணம், அவர் அணிந்திருந்தகிளாமர் டிரஸ். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், ஜிலுஜிலு சேலையில் வந்த லஷ்மி ராய் அத்தனை இதயங்களிலும் அலையடிக்கவைத்தார்.

படம் நெஞ்சைத் தொடுதோ இல்லையோ, லஷ்மி ராய் நிச்சயம் தொடுவார்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil