மயங்கி விழுந்த லஷ்மி ராய்

By Staff

உடல் பலவீனம் மற்றும் சோர்வு காரணமாக நடிகை லஷ்மி ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இடையில் ஏற்பட்ட தொய்வு நிலை நீங்கி தற்போது லஷ்மி ராய் படு சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சில படங்களில் நடித்து வரும் அவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராக் அண்ட் ரோல் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார்.

கடந்த பத்து நாட்களாக இரு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் உள்ள இரு வேறு ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இரு படங்களிலும் இடைவிடாமல் நடித்து வந்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை ராக் அண்ட் ரோல் படப்பிடிப்புக்கு வந்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார் லஷ்மி ராய். ஒரு கட்டத்தில் அப்படியே மயக்கமாகி விழுந்து விட்டார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அவரை ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அஙகு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடைவிடாமல் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட உடல் பலகீனமே மயக்கத்திற்குக் காரணம் என டாக்டர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.

அங்குள்ள சிறப்பு வார்டில் லஷ்மி ராய் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்கள் அவர் தங்கியிருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடல் நல பாதிப்பு குறித்து லஷ்மி ராய் கூறுகையில், தமிழ், மலையாளப் படங்களில் கடந்த ஒன்றரை மாதமாக ஓய்வெடுக்காமல் நடித்து வருகிறேன். சரியாக தூங்கக் கூட முடியவில்லை. மேலும் டான்சில் தொந்தரவும் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் இப்படியாகி விட்டது. ஒரு வாரம் ஓய்வெடுத்தால்தான் தொடர்ந்து நடிக்க முடியும் என்று தோன்றுகிறது.

ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன்.

எனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக தாம் தூம் படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கப் போகிறேன் என்றார் அந்த சோர்வையும் தாண்டிய சந்தோஷத்துடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X