தியாவும் லட்சுமி ராயும் லட்சுமி ராய் ரொம்பவே நம்பிக்கையானவராக உள்ளார். முதல் படமான கற்க கசடற, இவரை கவிழ்த்துவிட்டாலும் கூட அதை நினைத்துக் கவலைப்படாமல் படு தெம்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து தன்னைநிலைப்படுத்திக் கொள்ள பாடுபட்டு வருகிறார்.பெல்காம் ஏரியாவில் மதுபானக் கடைகளை செயினாக நடத்தி வரும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவரான லட்சுமிராய் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்தே தீர வேண்டும் என்று தீராத எண்ணத்துடன் இருக்கிறார்.இதற்காக சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி வாய்ப்பு தேடி வருகிறார்.தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் நேரிலும், போனிலுமாக பிடிக்கும் லட்சுமி ராய், தனக்கு வாய்ப்புதருமாறு நேரடியாகவே கேட்கிறார். அப்படியே பல ரவுண்டு நேரிலும் போய் பார்த்து பேசுகிறார்.இப்படியாக தனது நேரடி வேட்டையாடல் மூலம் 2 படங்களைப் பிடித்துள்ளார்.அதில் ஒன்று குண்டக்க மண்டக்க, இன்னொரு படம் ஒரு காதலன் ஒரு காதலி. இந்த இரண்டு படங்களிலும் ராய்அதிகம் நம்புவது ஒரு காதலன் ஒரு காதலி படத்தைத்தான்.குண்டக்க மண்டக்க படத்தில் கவர்ச்சி ஊறுகாயாக மட்டுமே அவர் நடிப்பதால், அப்படத்தை பெரிய அளவில்அவரே எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரு காதலன் ஒரு காதலி படத்தில் நான்தான் ஹீரோயின். ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு எனக்குஉள்ளதால் நடிப்பதற்கு நல்ல சான்ஸ் உள்ளது. கிளாமரும் கூடவே இருக்கும். எனவே என்னை நிரூபிக்க இந்தப்படம்தான் சரியான களமாக இருக்கும் என்கிறார்.முதல் படமான கற்க கசடறவில் ராய்க்கு போட்டியாக கிளாமர் காட்டி நடித்த தியா இப்போது ராயின் மிக நெருக்கமான நண்பிஆகிவிட்டார்.தன்னைப் போலவே வாய்ப்பு வேட்டையாடி வரும் தியாவுக்கு ராய் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறாராம். இருவரும்தினந்தோறும் தொலைபேசியில் ரொம்ப நேரம் கடலை போடுகிறார்கள்.வெளியில் பார்த்துக் கொண்டால் இருவரும் ஹாலிவுட் ஸ்டைலில் கன்னங்களை உரசி, அன்பை அள்ளிக் கொட்டுகிறார்கள்.அத்தோடு அடிக்கடி நேரிலும் மீட் செய்து ஜாலியாக பொழுதைப் போக்குகிறார்களாம்.லட்சுமி ராய் ஒரு வேளைக்கு பல கலர்களில் பல மாத்திரைகள் சாப்பிடுகிறார். இதெல்லாம் எதுக்கு என்று கேட்டால், வெறும்சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்க்கிறார். புள்ளைக்கு என்னவா இருக்கும்?

By Staff

லட்சுமி ராய் ரொம்பவே நம்பிக்கையானவராக உள்ளார். முதல் படமான கற்க கசடற, இவரை கவிழ்த்துவிட்டாலும் கூட அதை நினைத்துக் கவலைப்படாமல் படு தெம்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து தன்னைநிலைப்படுத்திக் கொள்ள பாடுபட்டு வருகிறார்.

பெல்காம் ஏரியாவில் மதுபானக் கடைகளை செயினாக நடத்தி வரும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவரான லட்சுமிராய் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்தே தீர வேண்டும் என்று தீராத எண்ணத்துடன் இருக்கிறார்.

இதற்காக சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி வாய்ப்பு தேடி வருகிறார்.


தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் நேரிலும், போனிலுமாக பிடிக்கும் லட்சுமி ராய், தனக்கு வாய்ப்புதருமாறு நேரடியாகவே கேட்கிறார். அப்படியே பல ரவுண்டு நேரிலும் போய் பார்த்து பேசுகிறார்.

இப்படியாக தனது நேரடி வேட்டையாடல் மூலம் 2 படங்களைப் பிடித்துள்ளார்.

அதில் ஒன்று குண்டக்க மண்டக்க, இன்னொரு படம் ஒரு காதலன் ஒரு காதலி. இந்த இரண்டு படங்களிலும் ராய்அதிகம் நம்புவது ஒரு காதலன் ஒரு காதலி படத்தைத்தான்.


குண்டக்க மண்டக்க படத்தில் கவர்ச்சி ஊறுகாயாக மட்டுமே அவர் நடிப்பதால், அப்படத்தை பெரிய அளவில்அவரே எதிர்பார்க்கவில்லை.

ஆனால், ஒரு காதலன் ஒரு காதலி படத்தில் நான்தான் ஹீரோயின். ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு எனக்குஉள்ளதால் நடிப்பதற்கு நல்ல சான்ஸ் உள்ளது. கிளாமரும் கூடவே இருக்கும். எனவே என்னை நிரூபிக்க இந்தப்படம்தான் சரியான களமாக இருக்கும் என்கிறார்.

முதல் படமான கற்க கசடறவில் ராய்க்கு போட்டியாக கிளாமர் காட்டி நடித்த தியா இப்போது ராயின் மிக நெருக்கமான நண்பிஆகிவிட்டார்.


தன்னைப் போலவே வாய்ப்பு வேட்டையாடி வரும் தியாவுக்கு ராய் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறாராம். இருவரும்தினந்தோறும் தொலைபேசியில் ரொம்ப நேரம் கடலை போடுகிறார்கள்.

வெளியில் பார்த்துக் கொண்டால் இருவரும் ஹாலிவுட் ஸ்டைலில் கன்னங்களை உரசி, அன்பை அள்ளிக் கொட்டுகிறார்கள்.அத்தோடு அடிக்கடி நேரிலும் மீட் செய்து ஜாலியாக பொழுதைப் போக்குகிறார்களாம்.

லட்சுமி ராய் ஒரு வேளைக்கு பல கலர்களில் பல மாத்திரைகள் சாப்பிடுகிறார். இதெல்லாம் எதுக்கு என்று கேட்டால், வெறும்சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்க்கிறார். புள்ளைக்கு என்னவா இருக்கும்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X