ரம்பா வெர்சஸ் லஷ்மி ராய்! விஜய் தம்பியுடன் முதல் படத்தில் திறமை காட்டிய லஷ்மி ராய் தட்டுத் தடுமாறி, கோலிவுட்டில் தன்னோட இடத்தை தேடிவருகிறார்.முதல் படமான கற்க கசடற, அதில் நடித்த யாருக்குமே சந்தோஷத்தைத் தரவில்லை. தியாவும், லஷ்மி ராயும் மாறி மாறி ரசிகர்களைகிளுகிளுக்க வைத்தது மட்டுமே மிஞ்சியது. இதனால் விக்ராந்தும் சோர்ந்து போனார், தியாவும் நொந்து போனார், லஷ்மி ராய்க்குமட்டும் எப்படியே அப்படி, இப்படி என ஓரிரு படங்கள் கிடைத்து ஓரளவுக்கு தப்பித்தார்.கற்க கசடற படத்தில் லஷ்மி ராய் காட்டிய கவர்ச்சி புயலைப் பார்த்து மிரண்டு போன சில தயாரிப்பாளர்கள் கணிசமானசம்பளத்திற்கு அவரை தங்களது படங்களில் புக் செய்தனர். அப்படியும் கூட லஷ்மி ராயின் கவர்ச்சியையே அவர்கள் குறிவைத்துஅழைத்ததால், நடிப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதாக புலம்புகிறார் லஷ்மி ராய்.பார்த்திபன், வடிவேலு ஜோடியுடன் சேர்ந்து குண்டக்க மண்டக்கவில் கவர்ச்சி களேபரம் செய்துள்ளார் லஷ்மி ராய். இதில் அவரதுகவர்ச்சிக்கே பிரதானம் என்பதால் நடிக்க வாய்ப்பே இல்லை. அதேபோல அழகிய ஆபத்து படத்திலும் இவரது கிளாமர்தான்முக்கியமாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும், வித்தியாசமான கதை என்பதால் கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்புஉள்ளதாம்.இதுதவிர இன்னொரு படத்திலும் லஷ்மி ராய் புக் ஆகியுள்ளார். ஆனால் இதில் அவர் செகண்ட் ஹீரோயின்தானாம். ரம்பாநடிக்கும் ஒரு காதலன் ஒரு காதலி படத்தில் கவர்ச்சிக்காக லஷ்மி ராயையும் இப்போது சேர்த்துள்ளனர்.என்னதான் ரம்பா, அன்லிமிட்டட் கிளாமருக்கு ஒத்துக் கொண்டாலும், பழைய கள் ஆச்சே என்று நினைத்தார்களோ என்னவோ,புதிய சரக்கான லஷ்மி ராயையும் இழுத்துப் போட்டுள்ளார்கள். செகண்ட்ஹீரோயின் வாய்ப்புதான் என்றாலும் அதைப் பற்றிக்கவலைப்படாத லஷ்மி, தன்னால் முடிந்த வரை நடிப்புச் சேவையாற்றி வருகிறாராம்.எனக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அது எங்கே இருக்கிறது, எப்படிப்பட்டது அது என்பதுதான் தெரியவில்லை. அதை சரியாகபுரிந்து கொள்ளத்தான் கிளாமர், நடிப்பு என இரண்டையும் கலந்து நடித்து வருகிறேன். இதற்காக எப்படிப்பட்ட வாய்ப்புகள்வந்தாலும் அதைத் தவற விடாமல் பிடித்துக் கொள்கிறேன் என்கிறார் லஷ்மி நம்பிக்கையுடன்.நம்பிக்கைதானே வாழ்க்கை!

By Staff

விஜய் தம்பியுடன் முதல் படத்தில் திறமை காட்டிய லஷ்மி ராய் தட்டுத் தடுமாறி, கோலிவுட்டில் தன்னோட இடத்தை தேடிவருகிறார்.

முதல் படமான கற்க கசடற, அதில் நடித்த யாருக்குமே சந்தோஷத்தைத் தரவில்லை. தியாவும், லஷ்மி ராயும் மாறி மாறி ரசிகர்களைகிளுகிளுக்க வைத்தது மட்டுமே மிஞ்சியது. இதனால் விக்ராந்தும் சோர்ந்து போனார், தியாவும் நொந்து போனார், லஷ்மி ராய்க்குமட்டும் எப்படியே அப்படி, இப்படி என ஓரிரு படங்கள் கிடைத்து ஓரளவுக்கு தப்பித்தார்.

கற்க கசடற படத்தில் லஷ்மி ராய் காட்டிய கவர்ச்சி புயலைப் பார்த்து மிரண்டு போன சில தயாரிப்பாளர்கள் கணிசமானசம்பளத்திற்கு அவரை தங்களது படங்களில் புக் செய்தனர். அப்படியும் கூட லஷ்மி ராயின் கவர்ச்சியையே அவர்கள் குறிவைத்துஅழைத்ததால், நடிப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதாக புலம்புகிறார் லஷ்மி ராய்.


பார்த்திபன், வடிவேலு ஜோடியுடன் சேர்ந்து குண்டக்க மண்டக்கவில் கவர்ச்சி களேபரம் செய்துள்ளார் லஷ்மி ராய். இதில் அவரதுகவர்ச்சிக்கே பிரதானம் என்பதால் நடிக்க வாய்ப்பே இல்லை. அதேபோல அழகிய ஆபத்து படத்திலும் இவரது கிளாமர்தான்முக்கியமாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும், வித்தியாசமான கதை என்பதால் கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்புஉள்ளதாம்.

இதுதவிர இன்னொரு படத்திலும் லஷ்மி ராய் புக் ஆகியுள்ளார். ஆனால் இதில் அவர் செகண்ட் ஹீரோயின்தானாம். ரம்பாநடிக்கும் ஒரு காதலன் ஒரு காதலி படத்தில் கவர்ச்சிக்காக லஷ்மி ராயையும் இப்போது சேர்த்துள்ளனர்.

என்னதான் ரம்பா, அன்லிமிட்டட் கிளாமருக்கு ஒத்துக் கொண்டாலும், பழைய கள் ஆச்சே என்று நினைத்தார்களோ என்னவோ,புதிய சரக்கான லஷ்மி ராயையும் இழுத்துப் போட்டுள்ளார்கள். செகண்ட்ஹீரோயின் வாய்ப்புதான் என்றாலும் அதைப் பற்றிக்கவலைப்படாத லஷ்மி, தன்னால் முடிந்த வரை நடிப்புச் சேவையாற்றி வருகிறாராம்.

எனக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அது எங்கே இருக்கிறது, எப்படிப்பட்டது அது என்பதுதான் தெரியவில்லை. அதை சரியாகபுரிந்து கொள்ளத்தான் கிளாமர், நடிப்பு என இரண்டையும் கலந்து நடித்து வருகிறேன். இதற்காக எப்படிப்பட்ட வாய்ப்புகள்வந்தாலும் அதைத் தவற விடாமல் பிடித்துக் கொள்கிறேன் என்கிறார் லஷ்மி நம்பிக்கையுடன்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X