கொம்பன் ஜோடியான கும்கி பெண்ணுக்கு… ரூ.1 கோடி சம்பளமாமே?

By Mayura Akilan

லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் லட்சுமிமேனனின் சம்பளம் கோடியை தொட்டுவிட்டதாம். கொம்பன் ஜோடியாக நடிக்கும் இந்த கும்கி நாயகிக்கு ஒரு கோடி கொட்டிக்கொடுக்க தயாராகி விட்டனராம் தயாரிப்பாளர்கள்.

நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப்பை ஆகிய வெற்றி படங்களில் நடித்த நடிகை லட்சுமி மேனன் அடுத்த நடிக்கவிருக்கும் படம் "கொம்பன்".

குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், வரும் நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெறும் என்று கூறிய இயக்குனர் முத்தையா, இந்த படத்தை வரும் ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராமத்து பெண்

கிராமத்து பெண்

கிராமத்து இளைஞனாக நடிக்கும் கார்த்திக்கு ஜோடியாக இந்த படத்தில் லட்சுமி மேனன் 'பழநி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முரட்டுத்தனம் மிகுந்த கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கவுள்ள லட்சுமி மேனன்,

ராஜ்கிரன் மகளாக

ராஜ்கிரன் மகளாக

இந்த படத்தில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், உடனடியாக ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். இவருடைய தந்தையாக ராஜ்கிரண் இந்த படத்தில் நடிக்கிறார்.

கோடியில் சம்பளம்

கோடியில் சம்பளம்

40 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த லட்சுமிமேனன் தற்போது கொம்பன் படத்துக்காக ஒரு கோடி சம்பளம் கேட்டாராம். லட்சுமி மேனன் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று படத்தின் நாயகன் கார்த்தி சொன்னதால் தயாரிப்பு தரப்பில் ஒரு கோடி சம்பளம் தர சம்மதித்துவிட்டார்களாம்.

வெற்றிப் படங்கள்

வெற்றிப் படங்கள்

சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை,ஜிகர்தண்டா, என அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்தது ஒரு பக்கம்- பத்தாம் வகுப்பு மாணவி என்ற இள வயது தோற்றம் இன்னொரு பக்கம் லட்சுமி மேனன் காலடியில் பட வாய்ப்புகளை குவித்துவிட்டன.

இளம் நாயகர்களின் பார்வை

இளம் நாயகர்களின் பார்வை

நான் சிகப்பு மனிதன் படத்தில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்ததும் சேர்ந்து கொள்ள அனைத்து முன்னணி இளம் கதாநாயகர்களின் பார்வையும் லட்சுமி மேனன் பக்கம் திரும்பிவிட்டன.

கொம்பன் ஜோடியான கும்கி

கொம்பன் ஜோடியான கும்கி

முத்தையா ஏற்கனவே லட்சுமிமேனனை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கியவர் என்பதால் தனக்கு ஜோடியாக லட்சுமிமேனனை ஒப்பந்தம் செய்யச் சொல்லி இருக்கிறாரார் கார்த்தி. அதன்படி கும்கி பொண்ணை கொம்பனுக்கு ஜோடியாக்கிவிட்டனர்.

காற்றுள்ள போதே

காற்றுள்ள போதே

முன்னணி நாயகர்களின் கண்கள் தன்பக்கம் திரும்புவதை புரிந்து கொண்ட லட்சுமி மேனன் தன் சம்பளத்தை லட்சத்திலிருந்து கோடியாக்கிவிட்டார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது லட்சுமி மேனனுக்கு தெரியாதா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X