லால் சலாம் ஹீரோயினுக்குள்ள இவ்ளோ திறமையா?.. பார்த்துமா மேல பட்டுட போகுதுன்னு பதறும் ஃபேன்ஸ்!

ஹைதராபாத்: தனுஷின் குபேரா படத்துக்குப் போட்டியாக இந்தி, தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை அதிகம் டார்கெட் செய்து வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடித்த அனந்திகா சனில்குமார் நடித்துள்ள '8 வசந்தலு' படம் வெளியாகிறது.

அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், மேடையேறிய இளம் நடிகை தனக்குள் இருக்கும் அத்தனை வித்தைகளையும் கொத்தாக இறக்க அத்தனை பேரும் வாயடைத்து பார்த்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Lal Salaam Actress Ananthika Sanilkumar martial arts performance at 8 Vasantalu event stuns fans
Photo Credit:

கேரளாவில் பிறந்து வளர்ந்த அனந்திகா சனில்குமார் தெலுங்கு திரையுலகில் தான் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தொடர்ந்து கோலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், மீண்டும் டோலிவுட்டுக்குச் சென்றுவிட்டார்.

யாரு இந்த அனந்திகா சனில்குமார்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் 1997ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பிறந்த அனந்திகா சனில்குமாருக்கு மலையாள திரையுலகில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ராஜமுந்திரி ரோஸ்மில்க்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர், 2023ம் ஆண்டு வெளியான 'மேட்' எனும் தெலுங்கு படத்திலும் நடித்தார். தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடித்து கோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

லால் சலாம் பட ஹீரோயின்: கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வெளியான லால் சலாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனந்திகா சனில்குமார். ஆனால், அந்த படம் டிசாஸ்டர் ஆன நிலையில், அவருக்கு பெரிதாக இங்கே பட வாய்ப்புகள் அமையவில்லை. சமீபத்தில், ஓடிடியில் வெளியான லால் சலாம் படத்தை பார்த்த பலரும் அனந்திகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். வரும் ஜூன் 20ம் தேதி பனிந்த்ர நரசெட்டி இயக்கத்தில் ரவி தேஜா துகிரலா, ஹனு ரெட்டி நடிப்பில் உருவாகி உள்ள '8 வசந்தலு' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேடையில் மொத்த வித்தை: தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றுள்ள அனந்திகா சனில்குமார் சமீபத்தில் நடைபெற்ற '8 வசந்தலு' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் மேடையில் தன்னுடைய தற்காப்பு வித்தைகளை அரங்கேற்றி அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டார். 28 வயதாகும் இளம் நடிகையான அனந்திகா சனில்குமார் சேலை அணிந்துக் கொண்டு ஜாக்கிசான் போல தற்காப்பு கலை பயிற்சி செய்யும் மரத்தில் தனது கைகளின் மூலம் அடித்து வித்தையை காட்டியும், அதன் பின்னர், ப்ரூஸ் லீ போல நஞ்சக்கை எடுத்து சுழற்றியும் காட்டிய வித்தையை பார்த்து இவரிடம் ரொம்பவே உஷாராத்தான் இருக்கணும் என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர், பார்த்தும்மா மேலே பட்டுடப் போகுது என்றும் பதறிப்போய் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

நடனமும் வரும்: அதிரடி ஆக்‌ஷன் மட்டுமில்லை, தனக்கு நளினமான நடனமும் வரும் என்பதையும் அதே மேடையில் அனைவரது முன்னரும் ஆடிக்காட்ட, அவரது அங்க அசைவுகளை பார்த்து வேறலெவல் அழகு என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X