நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு

By Shankar

Vijayashanthi
சென்னை: பிரபல நடிகையும் தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதியின் முக்கிய தலைவருமான விஜயசாந்தி மீது சென்னை எழும்பூரை சேர்ந்த இந்தர்சந்த் ஜெயின் நிலமோசடி புகார் கொடுத்துள்ளார்.

ஓட்டல் அதிபரான இவர், எழும்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், ஒரு மனு கொடுத்தார்.

அதில், "சென்னை தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலையில், உள்ள 2 கிரவுண்டு நிலம் ஒன்றுக்கு நடிகை விஜயசாந்தி பவர் ஏஜெண்டாக உள்ளார். இந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புக் கொண்ட அவர், அதற்காக, ரூ.5 கோடி பணமும் பெற்றுக் கொண்டார். நிலம் விற்பனை தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட நிலத்தை எனக்கு தராமல் வேறு ஒருவருக்கு விஜய சாந்தி விற்பனை செய்து மோசடி செய்து விட்டார். நான் கொடுத்த ரூ.5 கோடியையும் என்னிடம் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு விஜயசாந்தி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X