குழந்தையைக் கவனித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கும் லாரா தத்தா!
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகும் 'டேவிட்' என்ற படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க லாரா தத்தாவிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர்.
கடந்த ஜனவரி மாதம்தான் லாரா தத்தாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை அதிகமாக இருப்பதால் பட வாய்ப்பை ஏற்க தயங்கினார். 'குழந்தையை கவனித்த நேரம் போக மீதி நேரத்தில் கால்ஷீட் தருகிறேன். இதை ஏற்றுக்கொண்டால் நடிக்க தயார்' என்று லாரா கூறினார். அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார். பாலிவுட் ஹீரோயின் லாரா தத்தா 'அரசாட்சி' என்ற படத்தில் தமிழில் நடித்தார். 13 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பிஜாய் நம்பியார், இது லாராவுக்கு சிறப்பான வேடமாக அமையும். சமீபத்தில் அவரை சந்தித்து இதுகுறித்து பேசினேன். குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்றேன். அப்போது குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை இருப்பதால் நடிக்க தயங்கினார். பின்னர் அவர் ஓய்வு நேரத்தில் நடித்துக்கொடுக்க தயார் என்றார். அதை ஏற்றுக்கொண்டேன்.
நாசர், ரோகிணி ஹட்டாங்காடி, தபு, இஷா ஷர்வானி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்றார் இயக்குநர்.


Click it and Unblock the Notifications
