»   »  மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு பார்சல் ஆன லேட்டஸ்ட் நடிகை!

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு பார்சல் ஆன லேட்டஸ்ட் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கேரளத்திலிருந்து கோலிவுட்டுக்கு படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போதைய லேட்டஸ்ட் வரவு 'நிமிர்' படத்தின் நாயகி நமிதா பிரமோத்.

கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான, குமரக்கோம் தான், நமிதாவுக்குச் சொந்த ஊர். 'டிராஃபிக்', 'விக்ரமாதித்யன்', 'சந்திரேட்டன் எவிடே' போன்ற ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார்.

Latest Actress came from malluwood to kollywood

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக, 'நிமிர்' படத்தில் நடிக்கிறார் நமிதா. இவர் விஷயத்தில் நம்மை விட தெலுங்கு திரையுலகினர் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டார்கள்.

ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து அங்கு பிரபலமாகி விட்டார் நமிதா. தமிழ் சினிமா ரசிகர்கள், கேரளாவிலிருந்து வந்த பெரும்பாலான நடிகைகளுக்கும் வாழ்வு கொடுத்துள்ளனர். நமிதாவை மட்டும் கைவிட்டு விடுவார்களா என்ன?

English summary
The number of actresses who came from Kerala to kollywood are increasing day by day. Namitha Pramod is the latest in this queue. Namitha, who starred in Malayalam movies, is acting in 'Nimir' opposite Udhayanidhi in Priyadarshan's direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil