ஜிகு ஜிகு உடையில் சிலுக்கு போல கலக்கும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் இப்போது சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்
கீர்த்தி சுரேஷ் தந்தை சுரேஷ் குமார் தயாரிக்கும் வாஷி திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார்
நேனு லோக்கல் படத்திற்கு பிறகு மீண்டும் நான் உடன் இணைந்து தசரா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள கீர்த்தி சுரேஷ் இப்பொழுது ஜிகு ஜிகு உடையில் கிளாமரில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன

தேசிய விருது வென்ற
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடியில் லீட் ரோலில் நடித்து தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலேயே பெரும்பாலும் நடித்து வருகிறார். மகாநடி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மகாநடி
இந்த படத்தில் சாவித்திரியை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்தது போல நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற கீர்த்தி சுரேஷ். இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.. ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்து வரும் கீர்த்தி மகாநடி வெற்றியை தொடர்ந்து பெண் குயின்,மிஸ் இந்தியா, குட்லக் சகி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்

அண்ணன்-தங்கை பாசத்தை
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய அண்ணாத்த படத்தில் தங்கை வேடத்தில் கீர்த்தி நடித்திருப்பார்.அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்போது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் போலோ ஷங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் செய்த வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

ஜிகு ஜிகு உடையில்
கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வாஷி. இப்படத்தில். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் வக்கீலாக நடித்துள்ளனர். இவ்வாறு பரபரப்பாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ஜிகு ஜிகு உடையில் பதிவிட்டுள்ள கவர்ச்சியில் கலக்கும் அட்டகாச புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.


Click it and Unblock the Notifications











