»   »  மீண்டும் தமிழில் லயா..

மீண்டும் தமிழில் லயா..

Subscribe to Oneindia Tamil

அதென்னமோ தெரியவில்லை. நடிகர் சங்கத் தலைவரான விஜய்காந்த் எந்த நடிகையுடன் நடிக்கிறாரோ அவரை விரட்டிச் சென்று தனதுஅடுத்த படத்தில் புக் செய்துவிடுகிறார் சங்கத்தின் செயலாளரான சரத்குமார்.

இப்படித்தான் எங்கள் அண்ணாவில் அண்ணியாக வந்த நமீதாவை, ஏய் படத்தில் தனக்கு ஜோடியாக களமிறக்கிவிட்டு கொண்டாடினார்சரத்குமார். ஏரித் தண்ணியில் இருவரும் போட்ட ஆட்டம், படம் பார்ப்பவர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நமீதாவுக்கு குடுக்குறதை கொஞ்சம் கூடுதலாகத் தந்துவிட்டால், டிரஸ்ஸை இறக்குவதை கொஞ்சம் கூடுதலாகவே இறக்குகிறார். அந்தவகையில் நல்ல சம்பளம் கிடைத்தால் நமீதா தன் முழு இளமையையும் கட்டவிழ்த்துவிட்டார்.

இப்போது விஜய்காந்தின் முன்னாள் ஹீரோயினான லாயாவை வளைத்துப் போட்டுள்ளார் சரத்குமார், ஹீரோயினாக நடிக்கத் தான்.

கஜேந்திராவில் கேப்டனின் இரு ஜோடிகளில் ஒருவராக வந்து போன (நடிக்கத்தான் வாய்ப்பே தரலையே கேப்டன்) லயா இப்போதுசரத்குமாருடன் சாணக்யா என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

அடிப்படையில் தெலுங்குலகைச் சேர்ந்த லயா, அங்கு ஓல்டு போல்டுகளுடன் ஜோடி போட்டு நடித்தார். 26 தெலுங்குப் படங்களில் தனதுதிறமையைக் காட்டிய லயாவை இளவட்டங்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பிற மொழி மூத்த நடிகர்களுக்கு வலை வீசி வாய்ப்புதேடினார்.

தமிழில் பண்ணாரி அம்மன் என்ற ஒரு படம் கிடைத்தது. அதில் நடித்த லயாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. (இதில் நடித்ததைக் கூடஇவர் வெளியில் சொல்வதில்லை) இதையடுத்து மலையாளம் பக்கம் போய் மூத்த சேட்டன்களான மோகன்லால், ஜெயராம் ஆகியோருடன்ஆடிக் களைத்துவிட்டு கன்னடத்துக்குப் போய்விட்டார்.

இந்த நிலையில் தான் கஜேந்திரா முலம் திரும்பி தமிழுக்கு வந்தார். அதன் பிறகு நோ-சான்ஸ். இதனால் மீண்டும் தெலுங்குக்குக் போனவரைசாணக்யா மூலம் சரத்குமார் இழுத்து வந்துள்ளார்.

ஏ. வெங்கடேஷ் டைரக்ஷனில் உருவாகும் இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக லயா நடிக்கிறார். அப்ப இன்னொருஹீரோயின். வேறு யாருமல்ல ஜென்டில்மென்.. நமீதா தான்.

ஏய் மூலம் சரத்துடன் ஒட்டிவிட்ட நமீதாவுக்கு இதிலும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

கஜேந்திராவில் புளோராவுடன் மோதிக் கலக்கிய லயாவுக்கு இதில் நமீதாவை எதிர் கொள்ளும் கட்டாயம். (நீங்க ரெண்டு பேருமா... அப்பஅஜிலி குஜிலி காட்சிகளுக்கு குறைச்சல் இருக்காது) படத்தில் விளம்பரப் படங்களை எடுக்கும் டைரக்டர் வேடமாம் லயாவுக்கு.

தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று நடித்திருந்தாலும், என்ன காரணமோ தெரியவில்லை மலையாளப் படவுலகை ஆகா, ஓகோ எனவானளாவ புகழ்கிறார் லயா.

மலையாளம்.. வெரி குட் பீல்ட். எல்லோருமே மிகவும் அன்பாக பழகுகிறார்கள். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் (மலையாளத்தில்சூப்பர் ஸ்டாரா??) நடிகர்கள் எந்த பந்தாவும் இல்லாமல் பழகுவதைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்.

லயா ஒரு எம்.சி.ஏ. மாணவி என்பது உங்களுக்குத் தெரியுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil