»   »  லயா கொடுத்த இச்! தெலுங்கில் ரொம்ப காலம் கலைச் சேவை புரிந்து இப்போது தமிழில் அவ்வப்போது வந்து செல்லும் லயா ரொம்ப ஜோவியல்பேர்வழி!

லயா கொடுத்த இச்! தெலுங்கில் ரொம்ப காலம் கலைச் சேவை புரிந்து இப்போது தமிழில் அவ்வப்போது வந்து செல்லும் லயா ரொம்ப ஜோவியல்பேர்வழி!

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் ரொம்ப காலம் கலைச் சேவை புரிந்து இப்போது தமிழில் அவ்வப்போது வந்து செல்லும் லயா ரொம்ப ஜோவியல்பேர்வழி!

பார்ப்பதற்கு அமைதியாக இருப்பவர் போலத் தோன்றினாலும் நடிப்பிலும், கிளாமரிலும் சுனாமியையே கிளப்பும் அளவுக்குசூப்பர் நடிகை லயா.

இவர் நடித்த முதல் படம் பண்ணாரி அம்மன். அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதனால்அப்செட் ஆகி தெலுங்குக்குத் திரும்பிய லயாவை, கஜேந்திராவுக்காக கூட்டி வந்தனர்.

கேப்டன் விஜயகாந்த்துடன் ஜோடி சேருவதால் மிகப் பெரிய எதிர்காலம் கோடம்பாக்கத்தில் நமக்காக குத்த வைத்துக்காத்திருக்கிறது என்று நம்பினார் லயா.


ஆனால் பல்வேறு குழப்பங்களால் கஜேந்திராவும் வந்த வேகத்தில் பெட்டிக்குத் திரும்பி விட்டது. அட, போங்கப்பா நீங்களும்உங்க சினிமாவும் என்று கடுப்பாகி திரும்பவும் ஆந்திராவுக்கு பிளேன் ஏறினார் லயா.

ஆனாலும் லயாவுக்கும், கோலிவுட்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கும்போல, இப்போது மீண்டும் தமிழுக்குவந்துள்ளார். இம்முறை சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து சாணக்யாவில் அசத்தியுள்ளார்.

சாணக்யாவில் ஏற்கனவே நமீதாவும் தனது பெருத்த உடலுடன் பெரும் கவர்ச்சி களேபரத்தை நடத்தியுள்ளார். கூடவேலயாவையும் கிளாமர் கடலில் லயிக்க வைத்து கலக்கியுள்ளனராம். ஒருவர் இருந்தாலே அது ஊருக்குத் தாங்காது, இந்த நிலையில்லயாவும் சேர்ந்து மிரட்டியுள்ளதால், சரத்குமாரை பார்க்க வருபவர்களை விட நமீதா, லயாவை தரிசிக்கவே அதிக கூட்டம் வரும்என்பது தயாரிப்பாளரின் சில்மிஷக் கணக்கு.


இதில் என்ன விசேஷம் என்றால் சரத்குமாரின் நடிப்பை விட அதில் நடித்துள்ள வடிவேலுவின் செலம்பல்களைத்தான் லயாஅதிகம் ரசித்தாராம். ஒரு காட்சியில் வடிவேலு பணணிய கூத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த லயா, ஷாட் ஓ.கே. ஆனதும்,வடிவேலுவிடம் சென்று கைகுலுக்கி அவரைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்தாராம்.

இதை எதிர்பார்க்காத வடிவேலு, கொடுத்துட்டாய்யா, கொடுத்துட்டாய்யா என்று பிரமித்துப் போய் வீட்டுக்குப் போனாராம்.

சாணக்யா மூலம் தமிழில் தனக்கென ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரொம்பேவ கிளாமரில்விளையாடியுள்ளாராம் லயா. அதேசமயம் நடிப்பதற்கும் நல்ல வாய்ப்பாம். இரண்டையும் மிக்ஸ் செய்து காக்டெயில் விருந்துபடைத்துள்ள லயாவுக்கு இந்த முறையாவது கோலிவுட் அல்வா கொடுக்காமல் ஆரத்தி எடுக்குமா?

பார்க்கலாம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil