ஆபாசமாக காட்டமாட்டேன்.. அலையாதீங்க.. சப்ஸ்கிரைபர்களை விளாசிய லீடர் பட நடிகை!
சென்னை: கிரண், தர்ஷா குப்தா, அபிராமி, ஜனனி அசோக் குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் தனியாக சப்ஸ்கிரிப்ஷனை தொடங்கி சம்பாதித்து வருகின்றனர். நடிகை நந்திதா சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்ததும் என்ன குமுதாவும் ஆபாச போட்டோக்களை போட இறங்கிட்டாங்களா என ரசிகர்கள் கலாய்த்த நிலையில், அது ஒரு ஆப்ஷன் அவ்வளவு தான் என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், அந்த வரிசையில் லெஜண்ட் சரவணா ஜோடியாக லீடர் படத்தில் நடித்து கோலிவுட்டில் இந்த ஆண்டு ரசிகர்களை கவர்ந்த பாயல் ராஜ்புத் தற்போது ஆபாச கன்டென்ட் எல்லாம் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் காட்டமாட்டேன் என்றும் அதை எதிர்பார்த்து யாராவது வந்தால் அப்படியே ஓடிவிடுங்க என ஆவேசமான போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

மங்களவாரம் (செவ்வாய்க்கிழமை) படத்தில் அரை நிர்வாணமாக நடித்தும் ஆசை தீராத நோயால் அவதிப்படும் பெண்ணாக போல்டாக நடித்ததில் இருந்தே இவருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் இஷ்டத்துக்கு ஃபாலோயர்களாக மாறினர்.
4 மில்லியன் ஃபாலோயர்கள்: டெல்லியில் பிறந்து வளர்ந்த பாயல் ராஜ்புத் சன்னா மெரேயா எனும் பஞ்சாபி படத்தில் நடித்து 2017ல் சினிமாவில் அறிமுகமானார். ஆர் எக்ஸ் 100 எனும் தெலுங்கு படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார். வினய் உடன் இணைந்து இருவர் உள்ளம் எனும் தமிழ் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். இந்த ஆண்டு லெஜண்ட் சரவணா நடிப்பில் வெளியான ஸ்பை த்ரில்லர் படமான லீடர் படத்தில் இவரும் ஸ்பையாக நடித்து மாஸ் காட்டினார். மேலும், இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
சப்ஸ்கிரிப்ஷனில் குதித்த நடிகை: லீடர் படத்துக்குப் பிறகும் இவருக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. தமிழில் இவர் நடித்த கோல்மால் படம் இன்னமும் வெளியாகவில்லை. தெலுங்கிலும் ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் காத்திருக்கிறது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலேயே கவர்ச்சியான போட்டோக்களை போட்டு வரும் இவர் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குடித்த நிலையில், இதுவரை 96 பேர் இவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். தலா 390 ரூபாய் என்றால் 37,440 ரூபாய் இவருக்கு மாதம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கிடைக்கும் கூடிய சீக்கிரமே இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாசமாக காட்டமாட்டேன்: இந்நிலையில், சப்ஸ்கிரிப்ஷன் தொடங்கியதில் இருந்தே இவருக்கு ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எக்ஸ்க்ளூசிவாக போடுங்கள் என சில நெட்டிசன்கள் வற்புறுத்திய நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபாச கன்டென்ட் எதிர்பார்த்து என்னை யாரும் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டாம். அதற்கு இங்கு இடமில்லை. எந்தவொரு ஃபில்டரும் இல்லாமல், என்னோட ரியலை பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரிப்ஷன் என தெளிவாக கூறிவிட்டார். இதற்கு மேல் சப்ஸ்கிரைபர்கள் அதிகரிப்பார்களா? அல்லது குறைவார்களா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications