என்னம்மா இப்படி பண்றீங்க.. டிரெஸ் போட்டுக்கிட்டே அயன் பண்ணும் ’லீடர்’ ஹீரோயின்.. சுட்டுடாது?
சென்னை: லெஜண்ட் சரவணாவின் 'லீடர்' படம் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. லெஜண்ட் படத்தில் சந்தித்த விமர்சனங்களையும் ட்ரோல்களையும் முறியடிக்கும் விதமாக இந்த படத்தில் லெஜண்ட் சரவணா ரொம்பவே மெனக்கெட்டு இருந்தார்.
அவருக்கு ஜோடியாக லீடர் படத்தில் மங்களவாரம் படத்தில் காம பிரச்னையால் அவதிப்படும் பெண்ணாக நடித்திருந்த பாயல் ராஜ்புத் நடித்திருந்தார். லீடர் படத்தின் வெற்றி அவரை ரொம்பவே ஹேப்பியாக்கியுள்ளது என்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் டிரெஸ் போட்டுக் கொண்டே அயன் பண்ணும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். அதிலும், அவரது வயிற்றில் அயன் பாக்ஸை வைத்து அந்த தேய் தேய்க்கிறார் அவரது ஆடை பராமரிப்பாளர்.
பார்த்துங்க செல்லத்துக்கு சுட்டுடப் போகுது என ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
யாரு இந்த பாயல் ராஜ்புத்?: 33 வயதாகும் பாயல் ராஜ்புத் ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜண்ட் சரவணாவின் 'லீடர்' படத்தில் நடித்துள்ளார். சன்னா மேரேயா எனும் பஞ்சாபி படத்தில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகமானார். வீரே கி வெட்டிங் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். ஆர்எக்ஸ் 100 படத்தின் மூலம் தெலுங்கில் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. தொடர்ந்து டோலிவுட்டில் ஆர்டிஎக்ஸ் லவ், வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா, மாய பெட்டிகா, மங்களவாரம், ரக்ஷனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஏற்கனவே கோல்மால் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.
லீடர் படத்தில் செம ரோல்: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா, ஷாம், ஆண்ட்ரியா, லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லீடர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியானது. தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. 3 நாட்களில் 25 கோடி போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்து 50 கோடி போஸ்டர் வருமா? என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அந்த படத்தில் ஸ்பை கதாபாத்திரத்தில் அட்டகாசமாக பாயல் ராஜ்புத் நடித்திருந்தார். மேலும், அவருக்கு இதயம் இடது பக்கம் இல்லை என்றும் வலதுபுறம் உள்ளது என்றும் அவரது கதாபாத்திரத்தை வித்தியாசமாக செதுக்கியிருந்தார் துரை செந்தில்குமார்.
டிரெஸ் போட்டுக்கிட்டே அயன்: துணியை அயன் பண்ணிய பிறகு தான் எல்லோரும் போடுவார்கள். ஆனால், சினிமா ஷூட்டிங் போது சில இடங்கள் கசங்கி விட்டால், உடனடியாக அப்படியே அயன் பண்ணுவது வழக்கம் தான். அதுபோல லீடர் படத்தின் ஷூட்டிங்கின் போது தனது ஆடை பராமரிப்பாளர் அயன் பண்ண வீடியோ காட்சியை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார் பாயல் ராஜ்புத். தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்றும் எதிர்பார்கக்ப்படுகிறது.


Click it and Unblock the Notifications











