»   »  கத்துக்க எளிதான மொழி தமிழ்தான்!- 'தமிழச்சி' தமன்னா புகழாரம்

கத்துக்க எளிதான மொழி தமிழ்தான்!- 'தமிழச்சி' தமன்னா புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருக்கும் மொழிகளிலேயே கற்றுக் கொள்ள எளிமையானது தமிழ்தான் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தனது 16 வயதில் தமிழ் தெரியாமல் கேடி படத்தில் அறிமுகமானவர் தமன்னா. இப்போதோ சொந்தக் குரலில் டப்பிங் பேசும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு மேல் நடித்தும் இன்னும் சொந்தக் குரலில் தமிழ்ப் பேசத் தெரியாத நடிகைகளுக்கு மத்தியில் தமன்னாவின் தமிழ்ப் பற்று வியக்க வைத்துள்ளது.

ஈடுபாடு

ஈடுபாடு

இதுகுறித்து தமன்னா இப்படிக் கூறுகிறார்:

எது செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் இது நடந்தது. நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்கள். பரவசத்துடன் பார்த்தவர்களும் உண்டு.

பயிற்சி

பயிற்சி

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் போது, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேச வேண்டும் என எண்ணினேன். அதற்கான பயிற்சிகளை தினம் தினம் எடுத்து வந்தேன். அதனால்தான் இந்தளவுக்கு என்னால் பேச முடிகிறது.

எளிய மொழி தமிழ்

எளிய மொழி தமிழ்

என்னைப் பொருத்தவரை எளிதில் கற்றுக் கொள்ள கூடிய மொழி தமிழ்தான். இது நான் உணர்ந்தது. மற்றவர்களும் உணர்ந்தால் தமிழில் பேசலாம்.

கைவந்த கலை

கைவந்த கலை

இப்போது மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என தென்னகத்து மொழிகளில் பேசுவது எனக்கு கை வந்த கலை.

முழுமை

முழுமை

கிளாமர், நடனம் என்று மட்டுமே ஆடுவது ஹீரோயினின் வேலையாக இருக்க முடியாது. டப்பிங் பேசினால் அதில் ஒரு பூரணம் கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி".

ஆஹா.. கேட்கவே சிலிர்க்கிறது தமன்னா!

English summary
Actress Tamanna says that learning Tamil is simple and easy. Now she is dubbing her own in her forthcoming movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil