லீனா மரியா பால் நடித்த மலையாளப் படங்கள்

By Shankar

இவரா இவ்வளவு கோடிகளை ஆட்டையைப் போட்டார் என ஆச்சரியப்படவைக்கும் லீனா மரியா பால், பெருமளவு மலையாளப் படங்களில்தான் நடித்துள்ளார்.

கொச்சியைச் சேர்ந்த 25 வயது லீனா மரியா, கேரளாவின் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருடனுமே நடித்து குறுகிய காலத்தில் புகழ் பெற்றார்.

கேரளப் பெண்களுக்கே உரிய வனப்பும் கூடவே மெல்லிய உடல்கட்டும் அமைந்ததால் இந்தியிலும் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. இந்த நேரம் பார்த்து மோசடிப் புகாரில் சிக்கிக் கொண்டார்.

ரெட் சில்லிஸ்

ரெட் சில்லிஸ்

மோகன்லால் ஹீரோவாக நடித்த படம் ரெட் சில்லிஸ். த்ரில்லர் படமான இது பெரிய அளவில் போகவில்லை. மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த பெருமை மட்டும்தான் லீனா மரியாவுக்கு மிஞ்சியது.

கோப்ரா

கோப்ரா

இந்தப் படத்தில் ஹீரோ மம்முட்டி. லால் இயக்கிய இந்தப் படத்தில் லீனாவும் ஒரு நாயகியாக நடித்தார். ஆனால் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. லாலுக்கு ஜோடி அவர். இந்தப் படமும் சராசரியாகவே அமைந்தது.

ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா

ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா

மனைவிகளிடமிருந்து தப்பித்து கோவாவுக்கு டூர் போகும் மூன்று கணவர்களின் அனுபவம் இந்தக் கதை. இந்தக் கணவர்களில் ஒருவரைக் காதலிப்பவராக வருவார் லீனா மரியா. இந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை.

மெட்ராஸ் கபே

மெட்ராஸ் கபே

லீனா நடித்த முதல் இந்திப் படம் இது. ஜான் ஆபிரகாம் ஹீரோ. இன்னும் வெளிவராத இந்தப் படத்தை ஷூத் சர்க்கார் இயக்கியிருந்தார். வரும் ஆகஸ்டில் இந்தப் படம் ரிலீசாகிறது.

அதற்குள் லீனாவும் ரிலீசாகிவிடமாட்டாரா என்ன!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X