Leader day 3 collection: வசூலில் அதிரடி காட்டும் ‘லீடர்‘.. மூன்றாம் நாள் வசூல் விவரம்!
சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லீடர். ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், லால், அறம்தாங்கி நிஷா என பலர் நடித்திருக்கும் இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரத்தை பார்க்கலாம்.
தொழிலதிபரான அருள் சரவணனுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தனது கடையின் விளம்பரத்தில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து 'லெஜண்ட்' படத்தில் நடித்து சினிமாவில் தனது தடத்தை பதித்தார். தற்போது லெஜண்ட் சரவணன் லீடர் படத்தில் அட்காசமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து சண்டையில் காட்சிகளில் மிரட்டி உள்ளார். தூத்துக்குடியில் இருக்கும் துறைமுகத்தில் சமூக விரோதமான செயல்கள் நடப்பதை கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா, அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாமல் தவிக்கிறாள். இந்த நேரத்தில் தான் ஆண்ட்ரியாவின் அப்பா, அந்த துறைமுகத்தில் வில்லனுடன் நெருங்கி பழகக் கூடிய ஒருவனால் தான், அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என ஐடியா கொடுக்கிறார்.

லெஜண்ட் சரவணணின் லீடர்: இதையடுத்து துறைமுகத்தை ஆண்ட்ரியா மோப்பமிட்டு மெக்கானிக்கான லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி ஹார்பரில் இருக்கும் கார்களை சரி செய்து கொடுப்பதால், வில்லனுடன் இவருக்கு நல்ல நட்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறாள். பின் ஆண்ட்ரியா, லெஜண்ட் சரவணனை சந்தித்து ஹார்பர்ல இருக்கும் கண்டெய்னரில் ஓட்டு கெட்கும் மிஷினை வைக்க வேண்டும் என சொல்கிறாள். ஆனால் சரவணன், என்னால் என் முதலாளிக்கு துரோகம் செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
அதிரடியான ஆக்ஷன் கதை: ஆண்ட்ரியா சரவணனை சந்தித்து பேசிய விஷயம் ஹார்பரில் இருக்கும் வில்லனுக்கு தெரியவர, எதுக்காக இன்ஸ்பெக்டர் உன்னை சந்தித்தார், என்ன பேசினார் என வில்லன் மிரட்டுகிறான். அப்போது லெஜண்ட் சரவணன், உங்க வண்டியில் ட்ராக்கிங் டிவைஸ் வைக்க சொன்னாங்க நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்ற உண்மையை சொல்லுகிறான். இதை நம்பாத வில்லன், லெஜண்ட் சரவணனின் மகளை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுகிறார். அதன் பின் லெஜண்ட் சரவணன் எப்படி தனது மகளை காப்பாற்றினார் என்பது தான் லீடர் படத்தின் கதை.
மூன்றாம் நாள் வசூல்: லீடர் படம் வெள்ளிக்கிழமை வெளியாகி முதல் 3 நாட்களில் அதிகப்படியாக 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications