பிறவியிலேயே இதய நோய்..படப்பிடிப்பில் ரத்த வாந்தி.. அனார்கலி பட நடிகையின் கண்ணீர் கதை!
சென்னை: தமிழ் சினிமாவில் 1950களிலும் 1960களிலும் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களில் தோன்றிய புகழ்பெற்ற ஹிந்தி நடிகை தான் மதுபாலா. இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை இன்றும் உன்னதமானவையாகவும், ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையாகவும் இருக்கின்றன. நர்கீஸ், மீனா குமாரி நடிகையை போன்று ஹிந்தி சினிமா துறையில் தோன்றி திறமை மிக்க மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடிகைகளின் ஒருவராக இருந்தார் நடிகை மதுபாலா.
புகழ்பெற்ற ஹிந்தி நடிகையான இவர் சுமார் 70க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்து, இந்திய சினிமாவில் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவராக விளக்கி வருகிறார். இவருடைய அழகிய தோற்றமும், வசீகரமான முகத்தால் அனைவராலும் கவரப்பட்டார். நடிகை மதுபாலா மறைந்த பிறகு 1990 ஆம் ஆண்டு திரைப்பட பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான நடிகை என 58 சதவீத வாக்கு பெற்று மதுபாலா வரலாறு சாதனை படைத்தார். அவரின் கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை மதுபாலா: மதுபாலா என்று புகழ் பெற்ற 'மும்தாஜ் ஜெஹான் பேகம் தெஹ்லவி' 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ந் தேதி தேதி டெல்லியில் பிறந்தார். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை விட பழமைவாத பதான் குடும்பத்தில் 11 பேரில் ஐந்தாவது நபராக பிறந்தார். இவருடைய தந்தை வேலையை இழந்த பிறகு, குடும்பம் சாப்பாட்டுக்கே கையேந்தும் நிலைக்கு சென்றுவிட குடும்பத்தை கரை சேர்க்க, மதுபாலாவின் தந்தை படாதபாடுபட்டார். இந்த நேரத்தில், மதுபாலாவுடன் பிறந்த 4 சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து போனார்கள். கடைசியில், மதுபாலாவும் நான்கு சகோதரிகள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
9வயதில் சினிமாவில் நுழைந்தார்: குடும்பம் வறுமையில் விழுந்துவிட்டதால் மதுபாலாவின் தந்தை மும்பையில் பிழைப்புத் தேடி அலைந்தார். அப்போது, சினிமாவில் கம்பேனியில் ஒன்றில் எடுபிடியாக மதுபாலாவின் அப்பா வேலை செய்த போது தான் மதுபாலாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகை மதுபாலா தனது 9வது வயதில், 1942 ஆம் ஆண்டு பசந்தில் என்கிற படத்தில் ₹150 சம்பளத்திற்கு ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தில் புகழ் பெற்ற நடிகை சாந்தியின் மகளாக நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படத்தில் நடித்து வந்தார்.
பெயரை மாற்றினார்: மும்தாஜ் என்ற பெயருடன் நடித்து வந்த மதுபாலாவிற்கு நடிகை ஒருவர் கொடுத்த அறிவுரையின் படி தனது பெயரை மாதுபாலா என மாற்றி வைத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து நீல் கமல் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும், மதுபாலா கவனிக்கப்படும் நடிகையானார். இதைத்தொடர்ந்து மஹால், பாதல், தாரணா, அமர், மிஸ்டர் & மிஸஸ் '55, காலா பானி, ஹவுரா பாலம், சல்தி கா நாம் காடி, முகல்-இ-ஆசம்,பர்சாத் கி ராத், ஹாஃப் டிக்கெட் மற்றும் ஷராபி என பத்து வருடத்திற்குள் 72 திரைப்படங்களில் நடித்து அனைவரும் கொண்டாடும் நடிகையாக மாறினார் மதுபாலா.
ரத்த ரத்த வாந்தி: பிறவிலேயே இதயக்கோளாறுடன் பிறந்த மதுபாலா, சென்னையில் இந்தி படம் ஒன்றின் படப்பிடிப்பு நடிந்து கொண்டு இருந்தபோது ரத்த வாந்தி எடுத்து அவதிப்பட்டு வந்தார். அப்போது தான் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது சினிமா உலகிற்கு தெரிய வந்தது. இதய நோய்க்காக பரிசோதனை செய்த போது தான், இது குணப்படுத்த முடியாத வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு என்பது தெரியவந்தது. ஆனால், இதைப்பற்றி கவலைப்படாத. மதுபாலா, சினிமா மீது இருந்த காதலும், குடும்பத்தை கரைசேர்த்துவிட வேண்டும் என்ற பொறுப்பும் இருந்ததால், ஓய்வே இல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, நடிகை மதுபாலா புகழ்பெற்ற நடிகரும், பாடகருமான கிஷோர் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறவியில் இருந்தே இதய நோயுடன் அவதிப்பட்டு வந்த மதுபாலாவின் உடல் நிலையில், மோசமடைந்ததை தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மதுபாலா மறைந்து இருந்தாலும், அழிக்கமுடியாத அவரின் படங்களின் மூலம் வாழ்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











