லேகா வாஷிங்டனை ஞாபகம் இருக்கா?.. அந்த பிரபல நடிகருக்கு 2ம் தாரமாக ஆகப் போறாராம்!

மும்பை: காதலர் தினத்தில் வரும் ஓ மவுரியா பாடலில் ஒரு சின்ன சீனுக்கு வரும் லேகா வாஷிங்டன் எஸ்எஸ் மியூசிக் விஜேவாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவாக லேகா வாஷிங்டன், கிரேய்க் மற்றும் பூஜா ராமசந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

சன் மியூசிக்கில் ஹேமா சின்ஹா, மகாலட்சுமி எல்லாம் ஃபேவரைட்டாக இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசி தமிழ் பாடல்களை போடும் லேகா வாஷிங்டன் மீது ரசிகர்களுக்கு தனி கிரேஸ் இருந்தது.

Lekha Washington dating with Delhi Belly hero Imran Khan

பல ஆண்டுகளாக அவரை எங்கேப்பா காணோம் என தேடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது பாலிவுட் நடிகரை அவர் காதலித்து வருவது தெரிய வந்திருக்கிறது.

கெட்டவன் ஹீரோயின்: எஸ் எஸ் மியூசிக்கில் விஜேவாக வலம் வந்த லேகா வாஷிங்டன் காதலர் தினம், உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் சிம்புவுடன் இணைந்து கெட்டவன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார். அந்த படம் டிராப் ஆகி விட்டது. இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப் பட்டது. ஆனால், அதன் பின்னர் லேகா வாஷிங்டன் எங்கே சென்றார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது பெயர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Lekha Washington dating with Delhi Belly hero Imran Khan

டெல்லி பெல்லி ஹீரோ: அமீர் கான் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற டெல்லி பெல்லி படத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அந்த படம் தான் ஆர்யா, சந்தானம் நடிப்பில் தமிழில் சேட்டை என ரீமேக் ஆனது. அந்த படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இம்ரான் கானை தான் நடிகை லேகா வாஷிங்டன் தற்போது காதலித்து வருகிறார்.

முதல் மனைவியுடன் விவாகரத்து: டெல்லி பெல்லி, மெரே பிரதர் கி துல்ஹான், ஏக் மெயின் அவுர் ஏக் து, கட்டி பாட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இம்ரான் கான். கடந்த 2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2019ம் ஆண்டு தனது மனைவி அவந்திகாவை அவர் விவாகரத்து செய்து பிரிந்தார்.

லேகா வாஷிங்டன் உடன் காதல்: கொரோனா லாக்டவுன் காலத்தில் தான் லேகா வாஷிங்டனுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பம் அமைய அவரை காதலிக்கத் தொடங்கியதாகவும் தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் இம்ரான் கான் வெளிப்படையாக கூறியுள்ளார்.

குடும்பத்தை பிரிக்க வந்தவ கிடையாது: இம்ரான் கான் தனது மனைவி அவந்திகாவை பிரிய காரணமே லேகா வாஷிங்டன் தான் என குடும்பத்தை பிரிக்க வந்தவ என தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லேகா வாஷிங்டனும் நானும் நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க ஆரம்பித்தோம் அவர் ஒன்றும் குடும்பத்தை பிரிக்க வந்தவர் கிடையாது என பேசியது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X