லியோ தாஸ் தங்கச்சி இப்படி போஸ் கொடுக்கலாமா? இணையத்தை தெறிக்கவிட்ட மடோனா செபஸ்டின்!
சென்னை: மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். இவர் தங்கையாக நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக விஜய் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். லியோ படத்திற்கு பிறகு, இன்ஸ்டாகிராமில் இவரின் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அதை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் நடித்த அத்தனை ஹீரோயின்களும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கிளைமேக்ஸில் வரும் மடோனா செபாஸ்டியன் என மூன்று பேரின் நடிப்பும் அந்த படத்தில் அட்டகாசம். கடைசியாக நிவின் பாலிக்கு ஜோடியாக மாறும் மடோனாவை பார்த்து தமிழ் நாட்டிலும் பலரும் இவங்க தான் என் கிரஷ் என கொண்டாடினர்.

நடிகை மடோனா செபஸ்டின்: மலையாளத்தில் மாஸ் காட்டிய மடோனா தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து கவண், ப. பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
லியோ படத்தில்: இதையடுத்து, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில், பார்த்திபன் விஜய்யின் பேக்கரியில் வேலை செய்யும் பெண்ணாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி நடித்திருந்த நிலையில், லியோ தாஸின் தங்கை எலிசாவாக மடோனா செபாஸ்டியன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் வரும் நா ரெடிதான் பாடல் வரவா பாடலில் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடி இருப்பார் மடோனா செபஸ்டின்.
லியோ தாஸ் தங்கச்சிமா நீ: இணையத்தில், மிகவும் ஆக்டிவாக இருக்கும் மடோனா செபாஸ்டினை இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது, இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை மொத்தமாக காட்டி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் லியோ தாஸ் தங்கச்சி இப்படி போஸ் கொடுக்கலாமா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











