இனி ஹோம்லி ரோல் செட் ஆகாது.. செம ஹாட்டாக மாறிய மடோனா செபாஸ்டியன்!
சென்னை: மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து. விஜய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.இவர் தங்கையாக நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக விஜய் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். லியோ படத்திற்கு பிறகு, இன்ஸ்டாகிராமில் இவரின் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அதை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது ஹாட் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் நடித்த அத்தனை ஹீரோயின்களும் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டனர். நடிகை சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கிளைமேக்ஸில் வரும் மடோனா செபாஸ்டியன் என மூன்று பேரின் நடிப்பும் அந்த படத்தில் அட்டகாசம். கடைசியாக நிவின் பாலிக்கு ஜோடியாக மாறும் மடோனாவை பார்த்து தமிழ் நாட்டிலும் பலரும் இவங்க தான் என் கிரஷ் என கொண்டாடினர். அந்த அளவிற்கு ஒரே படத்தில் பிரபலமாகி விட்டார் மடோனா.

நடிகை மடோனா செபாஸ்டியன்: மலையாளத்தில் மாஸ் காட்டிய மடோனா தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து கவண், ப. பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

விஜய்யின் தங்கை: இதையடுத்து, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில், பார்த்திபன் விஜய்யின் பேக்கரியில் வேலை செய்யும் பெண்ணாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி நடித்திருந்த நிலையில், லியோ தாஸின் தங்கை எலிசாவாக மடோனா செபாஸ்டியன் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் வரும் நா ரெடிதான் வரவா பாடலில் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடி இருப்பார் மடோனா செபாஸ்டியன். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது.லியோ படத்தை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலியோ ஜிம்கானா ஆகிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஹாட்டாக மாறிய மடோனா: இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மடோனா செபாஸ்டியனை இன்ஸ்டாகிராமில் மூன்று புள்ளி மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். லியோ படத்திற்கு பின் இவரின் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அவர்களை தக்கவைத்துக்கொள்ள விதவிதமான போட்டோக்களை அவ்வப்போது அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர் ஸ்டைலாக இருக்கும் போடோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











