மகா சிவராத்திரி.. காஷ்மீரில் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்த த்ரிஷா.. லியோ ஹீரோயினின் பக்தி மோட்!
ஸ்ரீநகர்: நடிகை த்ரிஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள ஒரு சிவாலயத்திற்கு சென்று பூஜை செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

சிவ பக்தை
தீவிர சிவ பக்தையான நடிகை த்ரிஷா ஆண்டு தோறும் மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றுள்ள நிலையில், அங்கே உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் நேற்று இரவு பூஜை நடத்தி உள்ளார் த்ரிஷா.

5வது முறையாக விஜய்யுடன்
நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி என 4 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை த்ரிஷா 5வது முறையாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் இணைந்துள்ளார். காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் உடன் தனி விமானத்தில் லியோ படக்குழுவுடன் பறந்த த்ரிஷா, திடீரென திரும்பி வந்த நிலையில், மீண்டும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காஷ்மீரில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, நேற்று இரவு காஷ்மீரில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கே உள்ள சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சோழ இளவரசி ஆச்சே
பெருவுடையாருக்கு தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சகோதரி குந்தவையாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள த்ரிஷா இப்படி சிவனுக்கு பூஜை செய்வதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
குவியும் லைக்ஸ்
நடிகை த்ரிஷா மகா சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவின் பக்தியை பார்த்து பரவசம் அடைந்து லைக்குகளையும், ஓம் நமச்சிவாயா என கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











