லியோ படத்தில் கிடைத்த வாய்ப்பு.. செம சந்தோஷத்தில் இருக்கும் பிரேமம் பட நடிகை.. லேட்டஸ்ட் பிக்ஸ்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில், மடோனா சபாஸ்டியனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
2015ல் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் செலின் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியனுக்கு இன்னமும் ரசிகர்கள் அப்படியே இருக்கின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜே அந்த படத்தை பார்த்த பிறகு மடோனா ரசிகராக மாறியவர் தான் போல, விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான ரோலில் அவரை நடிக்க வைத்துள்ளதாக கூறுகின்றனர்.
பிரேமம் டு லியோ: பிரேமம் படத்தில் அனுபமா உடன் சிறு பெண்ணாக வரும் செலின் தான் கடைசியில் மடோனா சபாஸ்டியனாக நிவின் பாலிக்கு வாழ்க்கை கொடுப்பார். அனுபமா மற்றும் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி என ஒவ்வொரு காதல் பிரிவுகளையும் சந்திக்கும் நிவின் பாலி கடைசியில் செலினை பார்த்ததும் திருமணம் செய்துக் கொள்வார்.

தமிழில் விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் கவண் படத்திலும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தனுஷின் பா பாண்டி படத்தில் சின்ன வயது ரேவதியாக நடித்த மடோனா மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் நடித்தார். அதன் பின்னர், அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வந்த நிலையில், தற்போது லியோவில் மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
செம சந்தோஷத்தில் மடோனா: இந்நிலையில், லேட்டஸ்ட்டாக செம சந்தோஷமாக இருக்கும் மடோனா செபாஸ்டியன் நடத்திய க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
வெள்ளை நிற மாடர்ன் உடையில் லேசாக பூப்போட்ட டிசைனில் செம க்யூட்டாக சிரித்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் மடோனா செபாஸ்டியன்.



Click it and Unblock the Notifications











