அப்போ அப்டி சொன்னீங்க.. இப்போ இப்டி சொல்றீங்க.. பிக்பாஸ் போறீங்களா இல்லையா.. குழப்பும் பிரபல நடிகை!
சென்னை: பிரபல நடிகை பிக்பாஸ் குறித்து மாறிமாறி பேசி வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெறும் என தெரிகிறது.

பிக்பாஸ் வாய்ஸ்
முதல் புரமோவை காட்டிலும் இரண்டாவது புரமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கமலின் டான்ஸ், பிக்பாஸ் வாய்ஸ் என அசத்தலாய் தயார் செய்திருந்தனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

பிரபலத்தின் பெயர்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட் யாராவது ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டு வருகிறது.

பூனம் பாஜ்வா
இதில் சில பிரபலங்கள் தாங்கள் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். சுனைனா, பூனம் பாஜ்வா போன்றோர் தாங்கள் பங்கேற்க போவதில்லை என்பதை அறிவித்து விட்டனர்.

லக்ஷ்மி மேனன்
நடிகை சின்மயியும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என அறிக்கை வெளியிட்டு காட்டமாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில் நடிகைகள் ஷாலு ஷம்மு மற்றும் லக்ஷ்மி மேனன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் பரவி வருகிறது.

அம்ரிதா அய்யர்
அதேபோல் விஜய் டிவி பிரபலங்களான புகழ், ரியோராஜ் உள்ளிட்ட பலரின் பெயர்களும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அடிபடுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக பிகில் பட நடிகை அம்ரிதா அய்யரின் பெயர் அடிபட்டது.

லைவில் சாட்
ஆனால் அதனை மறுத்த அம்ரிதா அய்யர் ஏன் எந்த சம்பந்தமும் இல்லாமல் என் பெயரை பிக்பாஸ் லிஸ்ட்டில் பயன்படுத்துகிறீர்கள் என்று டிவிட்டினார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் ரசிகர்களுடன் சாட் செய்தார் அம்ரிதா அய்யர்.

சஸ்பென்ஸாவே இருக்கட்டும்
அப்போது ஒரு ரசிகர் நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அம்ரிதா அய்யர் எனக்கு தெரியாது.. அது சஸ்பென்ஸாவே இருக்கட்டும் என கூறியுள்ளார்.
Recommended Video

போறீங்களா இல்லையா?
இதனை பார்த்த ரசிகர்கள், அப்போது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்ரிதா அய்யர் பங்கேற்க போகிறார் என்ற முவுக்கு வந்துள்ளனர். அதேநேரம் சில ரசிகர்கள் டிவிட்டரில் ஒரு மாதிரி பேசுகிறீர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு மாதிரி பேசுகிறீர்களே.. பிக்பாஸ் போறீங்களா இல்லையா என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











