முதலமைச்சராகும் விஜய்.. கட்சியில் சேர்க்க சொல்லி கெஞ்சும் நடிகை.. என்ன நடந்தது?

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி 73 இடங்களை மட்டுமே வென்றது. இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் தவெக ஆட்சியமைத்து விஜய் முதலமைச்சராகலாம்.கண்டிப்பாக அது கிடைத்துவிடும் என்பதால் தவெகவினர் உற்சாகமாக இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகை விஜயலட்சுமி தன்னை தவெகவில் சேர்த்துக்கொள்ளுமாறு பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று பலரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கும். அத்தனைக்கும் காரணம் விஜய். கட்சி ஆரம்பித்த புதிதில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், '234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர்' என்று கர்வத்தோடு கூறினார். அப்படி அவர் கூறியபோது இவர் ஓவர் நம்பிக்கையில் பேசுகிறார். பத்து இடங்களைகூட தாண்டமாட்டார் என்று பெரும்பாலானோர் எள்ளி நகையாடினார்கள். அவர் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

Let Me Join TVK Actress Vijayalakshmi s Appeal to Vijay Goes Viral
Photo Credit:

சம்பவம் செய்த தவெக: ஆனால் அவர் அன்று சொன்னதுதான் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் மக்களுக்கு தவெக வேட்பாளரின் பெயரைகூட தெரியாது. அவர்களை பொறுத்தவரை விஜய்க்கு வாக்களிக்கிறோம் என்று வாக்களித்திருக்கிறார்கள். அதன் பலனாக மொத்தம் 108 தொகுதிகளில் வென்று கெத்து காண்பித்திருக்கிறது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அவர் பெற்ற வாக்கு விழுக்காட்டினைவிடவும் விஜய் பெற்றது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி ஆரம்பித்து சில வருடங்களிலேயே இப்படி ஒரு வரலாற்று வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்.

Also Read
35வயது குறைவான 23 வேட்பாளர்கள், கர்ப்பிணி, ஆட்டோ டிரைவர் வெற்றி.. தவெகவின் மகத்தான சாதனை!
35வயது குறைவான 23 வேட்பாளர்கள், கர்ப்பிணி, ஆட்டோ டிரைவர் வெற்றி.. தவெகவின் மகத்தான சாதனை!

கண்டிப்பாக முதலமைச்சர்தான்: அதேசமயம் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்பதால்; இன்னும் பத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு வேண்டும். இப்போதைக்குவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அதிகாரத்தில் பங்கு வாங்குவார்கள் என்று தெரிகிறது. அதேசமயம் காங்கிரஸுக்கோ, விசிகவுக்கோ தவெக தரப்பிலிருந்து தொடர்புகொண்டு ஆதரவும் இதுவரை கேட்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் இதெல்லாம் அராங்கேறும் என தெரிகிறது. விஜய்யும் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

விஜயலட்சுமி வீடியோ: இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில்கூட தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவராக தவெக எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவர், "வாழ்த்துகள் விஜய் அண்ணா. மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறீர்கள். தவெகவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அவர்கள் கொடுத்த தீர்ப்பினை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சந்தித்திருப்பேன்: நான் மட்டும் சென்னையில் இருந்திருந்தால் நேரில் சென்று அண்ணனை சந்தித்திருப்பேன். என்னையும் தவெகவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் உங்களை மாதிரியே தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கேட்டிருப்பேன். ஆனால் நான் சென்னையில் இல்லை. எனது அக்காவுக்கு ரொம்ப உடல் நிலை சரியில்லை. அதனால் அவருடன் இருக்கிறேன். மக்கள் நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீணாகிவிடக்கூடாது என வாழ்த்துகிறேன். மீண்டும் விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X