என்கூடவே இருந்து சிறப்பா வழிநடத்தினாரு சூர்யா... ஜெய் பீம் நாயகி குஷி!

சென்னை : இன்றைய தினம் ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது ஜெய் பீம் படம்.

இந்தப் படத்தில் நாயகி லிஜோமோல் ஜோஷை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு சிறப்பான அங்கீகாரம் கொடுத்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் படம்

ஜெய் பீம் படம்

தீபாவளியையொட்டி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்றைய தினம் வெளியாகியுள்ளது ஜெய் பீம். இந்தப் படத்தில் வழக்கறிஞராக பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் கேரக்டரில் தோன்றியுள்ளார் சூர்யா. அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் சிறப்பாக உருவாகியுள்ளது ஜெய் பீம்.

சிறப்பான லிஜோமோல் நடிப்பு

சிறப்பான லிஜோமோல் நடிப்பு

இந்தப் படத்திற்கு பரவலாக சிறப்பான விமர்சனங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. படத்தில் தன்னுடைய கணவனை போலீஸ் நிலையத்தில் தொலைத்த கர்ப்பிணி பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார் லிஜோமோல் ஜோஸ். இவரது கதாபாத்திரத்தை சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மஞ்சள் பச்சை படம்

சிவப்பு மஞ்சள் பச்சை படம்

இவர் முன்னதாக மலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றவர். தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானார். இதில் சித்தார்த்துக்கு மனைவியாகவும் ஜிவி பிரகாஷுக்கு அக்காவாகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

பழங்குடியின பெண் கேரக்டர்

பழங்குடியின பெண் கேரக்டர்

இவருக்கு இந்தப் படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்த நிலையில் தீதும் நன்றும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜெய் பீம் படத்தல் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டு நடித்துள்ளார். பழங்குடியின பெண்ணாகவே இவரை படத்தில் காண முடிந்தது.

லிஜோமோல் நன்றி

லிஜோமோல் நன்றி

இந்நிலையில் இன்றைய தினம் படம் வெளியாகி இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இவரது கதாபாத்திரம் பார்த்தவர்களை பரிதவிக்க வைத்துள்ளது. இதனிடையே, ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு லிஜோமோல் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சூர்யாவிற்கு நன்றி

சூர்யாவிற்கு நன்றி

மேலும் தன்னுடன் கூடவே இருந்து தன்னை வழிநடத்திய சூர்யாவிற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில உள்ளனர். இதேபோல லிஜோமோல் ஜோஷும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது இந்தப் பதிவின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X