LIK படத்துல கிளைமேக்ஸ் வரை ரோபோவா நடிச்சது இந்த நடிகையா?.. எஸ்.ஜே. சூர்யாவோட சூப்பர் ஜோடி யாரு?
சென்னை: பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு ரோபோ வரும். படத்தின் முதல் காட்சியில் இருந்தே யாருடா இந்த ரோபோ பெண் சூப்பரா இருக்கே என படத்தில் இருப்பவர்கள் முதல் படம் பார்ப்பவர்கள் வரை என பலரும் ஜொள்ளு விட்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த படத்தில் நடித்த அனுபவங்களை ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார் நடிகை எடின் ரோஸ் (Edin Rose). லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா சார் ஜோடியாக நடித்தது ரொம்பவே பெருமை என பதிவிட்டுள்ளார்.

டோலிவுட்டில் ரவி தேஜா நடிப்பில் வெளியான ராவணாசூரா படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை எடின் ரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சி மாடல்: சோஷியல் மீடியாவில் உள்ள ஏகப்பட்ட கவர்ச்சி மாடல்கள் சினிமாவை நோக்கி அடியெடுத்து வைத்து வருகின்றனர். ஆனால், அதில் ஒரு சிலருக்கு மட்டுமே பட வாய்ப்புகள் குறிப்பாக பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. தமிழில் முதல் படத்திலேயே எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக பிரதீப் ரங்கநாதன் படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எடின் ரோஸுக்கு கிடைத்துள்ளது.
கிளைமேக்ஸ் வரை ரோபோ: 2.0 படத்தில் எமி ஜாக்சன் ரோபோவாக நடித்திருப்பார். அதே போல இந்த படத்தில் பெண் ரோபோவாக நடித்துள்ளார் நடிகை எடின் ரோஸ். அவரது காட்சிகள் எல்லாம் அதிகளவில் கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சி நிறைந்த காட்சிகளாகவே இயக்குநர் விக்னேஷ் சிவன் உருவாக்கியுள்ளார். அதிலும், கிளைமேக்ஸ் காட்சியின் போது இவருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கும் சண்டை எல்லாம் வைத்து வேறலெவல் சம்பவம் செய்துவிட்டனர்.
நன்றி தெரிவித்த எடின் ரோஸ்: இந்தியாவின் சிறந்த ஆளுமைகளுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பணியாற்றியது எனக்கு ரொம்பவே பெருமையாக உள்ளது. விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன், ரவுடி பிக்சர்ஸ் என பலருக்கும் தனது நன்றியை தெரிவித்து படக் காட்சிகளையும் பிடிஎஸ் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளார் எடின் ரோஸ். அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











