அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்த நடிகைகள்!
தென் இந்திய சினிமாவில் அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்த நடிகைகள் அதிகம். முதலில் மகனுக்கு ஜோடியாக இளம் வேடத்தில் நடித்திருப்பார். பின்னர் மார்க்கெட் போன பின்னர் வயதான வேடத்தில் அப்பாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
உதாரணத்துக்கு அம்பிகா, ராதா போன்றோர் பிரபுவுக்கும், அவரது அப்பா சிவாஜிக்கும் ஜோடியாக நடித்திருப்பார்கள். ஆனால் தெலுங்கில் மெகா குடும்பங்கள் நடிக்க வந்த பிறகு இது அப்படியே தலைகீழாகவும் கூட மாறியிருக்கிறது.
சமீபகாலங்களில் அப்பா மகனுக்கு ஜோடியான நடிகைகள்...

சமந்தா
கிட்டத்தட்ட தென் இந்தியாவின் எல்லா டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார் சமந்தா. மெகா ஸ்டார் குடும்பத்தின் இரண்டு தலைமுறை நடிகர்களுடனும் இணையாகி விட்டார். முதலில் பவர்ஸ்டார் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்தவர் சில ஆண்டுகளில் அவரது அண்ணன் மகனான அல்லு அர்ஜுனுடனும் சன் ஆஃப் சத்யமூர்த்தியில் ஜோடி சேர்ந்தார்.

இலியானா
இலியானாவுக்கும் இப்படி ஒரு சாதனை சொந்தமாகியிருக்கிறது. 2008 ல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஜல்ஸா படத்தில் நடித்தவர் அடுத்த 4 ஆண்டுகள் கழித்து அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஜுலாயியில் நடித்தார்.

த்ரிஷா
தென் இந்தியாவில் அதிக ஆண்டுகளாக ஹீரோயினாக இருப்பவர் த்ரிஷா. 2012 ல் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக தம்மு படத்தில் நடித்தவர், போன வருடம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக லயனில் நடித்தார்.

ஸ்ரேயா சரண்
முதலில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 2002 ல் நடித்தவர் பின்னர் மூன்று ஆண்டுகளில் ஜுனியர் என் டி ஆருக்கு ஜோடியாக நா அல்லுடு படத்தில் நடித்தார். இப்போது திரும்ப பாலகிருஷ்ணாவின் நூறாவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

காஜல் அகர்வால்
ஒரே ஆண்டில் பாலகிருஷ்ணா, ஜுனியர் என் டி ஆர் இருவருக்குமே ஜோடியாக நடித்த பெருமை காஜலை சேரும். ஆண்டு 2010.

நயன்தாரா
வெங்கடேஷுடன் ஜோடி சேர்ந்த லெக்ஷ்மி பெரிய ஹிட். இது நடந்தது 2007 இல். ஐந்தாண்டுகள் கழித்து 2012 ல் ராணாவுக்கு ஜோடியாக நடித்தார் நயன்.

தமன்னா
தமன்னாவும் இதில் விதிவிலக்கல்ல. ராம்சரண், அவரது சித்தப்பா உறவான பவன் கல்யாண் இருவருடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

அனுஷ்கா
அனுஷ்கா நாகார்ஜுனா குடும்பத்தில் இப்படி அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் வெங்கடேஷ் குடும்பத்திலும் வெங்கடேஷுடனும் ராணாவுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். வெங்கடேஷுடன் நாகவள்ளி, சிந்தகயலா ரவி படங்களில் ஜோடி போட்டவர் ராணாவுடன் ருத்ரமாதேவியில் நடித்தார். பாகுபலியிலும் நடித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன்
பவன் கல்யாணுடன் கப்பார் சிங்கில் நடித்தார் ஸ்ருதி. அடுத்து அவரது மகன் முறை உறவுகளான அல்லு அர்ஜுன், ராம்சரண் இருவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.

ஸ்ரீதேவி
இவை எல்லாவற்றுக்கும் ஆரம்பமே ஸ்ரீதேவி தான். நாகார்ஜுனாவின் அப்பாவுக்கு ஜோடியாக 1971, 1981 என பத்தாண்டு இடைவெளியில் இரண்டு படங்களில் நடித்தவர் 1988ல் நாகார்ஜுனாவுக்கே ஜோடியாக 1988ல் நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











