திருமணம் செய்யாமல் இளம் நடிகருடன் சேர்ந்து வாழ்கிறாரா காஜல் அகர்வால்?

By Siva

ஹைதராபாத்: மொரட்டு சிங்கிளாக உள்ள காஜல் அகர்வால் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக வெளியான தகவல் குறித்து முன்பு விளக்கம் அளித்தது பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது.

காஜல் அகர்வாலுக்கு வயது 34 ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் காஜலோ படங்களில் படுபிசியாக உள்ளார். இதற்கிடையே பெற்றோர் மாப்பிள்ளை தேடும் வேலையை துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Live-in relationship with a young actor: Kajal is in news again

தங்கை நிஷாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதால் அக்கா காஜலுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி செய்து வருகிறார்களாம்.

இந்நிலையில் காதல், லிவ் இன் முறைப்படி வாழ்வது குறித்து காஜல் முன்பு அளித்த பேட்டி குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகிறது. காஜலும், தெலுங்கு நடிகர் ராமும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வதாகவும் முன்பு கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து அறிந்த காஜல் கூறியதாவது,

நானும், ராமும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்ததால் நாங்கள் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக பேசுகிறார்கள். எப்படித் தான் இது போன்ற வதந்தி கிளம்புகிறதோ. சொல்லப் போனால் நான் அவரை அங்கிருந்தபோது பார்த்ததே இல்லை என்றார்.

தெலுங்கு திரையுலகை பொறுத்த வரை சமத்து நடிகை என்றால் அது காஜல் தான். பிரபலமான நடிகையாக இருந்தாலும் செட்டில் திமிராக நடந்து கொள்வது இல்லை. இயக்குநர் சொல்வது படி நடித்துக் கொடுப்பார், தயாரிப்பாளர்கள் பாக்கெட்டில் ஓட்டை போடுவது இல்லை. அதனால் காஜல் அகர்வாலை விரும்பி ஒப்பந்தம் செய்கிறார்கள்.

காஜல் அகர்வால் தமிழில் ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து அவர் கையில் 2 தெலுங்கு படங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படி பட வாய்ப்புகள் வந்து குவிந்தால் அவரால் எப்படி திருமணம் பற்றி யோசிக்க முடியும். தென்னிந்திய திரையுலகில் தான் திருமணமானால் நடிகையின் மார்க்கெட் சரிந்துவிடுமே. திருமணத்திற்கு பிறகு தனக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று சமந்தாவே தெரிவித்தார்.

அது என்ன சமந்தாவே என்று நினைக்கலாம். திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் கொஞ்சமும் பாதிக்காமல் நடித்து வருகிறார் சமந்தா என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவர் தனக்கு முன்பு போன்று பட வாய்ப்புகள் வருவது இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X