ஆரவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கேனா?: உண்மையை சொன்ன ஓவியா
சென்னை: ஆரவுடன் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக எழுந்த பேச்சு குறித்து ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.
பிக் பாஸ் 2வது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா பற்றி தான் பேச்சாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டார். ஆரவ் அதை ஏற்றுக்கொள்ளாதது அனைவரும் அறிந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ராசியாகிவிட்டனர்.

லிவ் இன்
ஆரவும், ஓவியாவும் சேர்ந்து ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள், வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள். இதை பார்த்தவர்கள் அவர்கள் காதலிப்பதாக பேசுகிறார்கள். இந்நிலையில் ஆரவும், ஓவியாவும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவி போன்று லிவ் இன் முறைப்படி வாழ்வதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் பேச்சு கிளம்பியது.

ஓவியா
ஆரவும், ஓவியாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான தகவல் அறிந்து அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. காரணம் ஓவியா.

திருமணம்
ஆரவும், நானும் நல்ல நண்பர்கள். அவ்வளவு தான். நாங்கள் லிவ் இன் முறைப்படி வாழவில்லை. எங்களுக்கு திருமணம் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை. எங்களுக்கு இடையே நட்பு, நட்பு மட்டுமே உள்ளது என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஓவியா.
புகைப்படம்
புத்தாண்டு அன்று ஆரவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள் இது காதல் இல்லாமல் என்னவாம் என்று கேட்டுள்ளனர். அவர்கள் நிச்சயம் காதலிப்பதாக நெட்டிசன்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











