Livingston daughter: “லிவிங்ஸ்டன் மகளா இது?” உச்சு கொட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஜோவிதா லிவிங்ஸ்டன். தற்போது அவரது மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். பூவே உனக்காக, அருவி, மௌனம் பேசியதே உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற ஜோவிதா, தனது இயல்பான நடிப்பால் இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

ஜோவிதா லிவிங்ஸ்டன்: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா, அடிக்கடி கிளாமரான மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சில் கவர்ச்சி உடையில் காற்றை ரசிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பின்னணியாக வைத்து எடுத்த அந்த போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்தகள் செம்ம அழகு, ஹீரோயினாக கலக்கப் போறீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் "லிவிங்ஸ்டன் மகளா இது?" என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

Jovita Livingston photos
Photo Credit:

இதற்கிடையில்,ஜோவிதா விரைவில் பெரிய திரையிலும் ஹீரோயினாக அறிமுகமாக இருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கே.எஸ். கிஷான் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்ப பின்னணியுடன் வந்தாலும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஜோவிதா தீவிரமாக இருப்பதாகவும், அதற்காக நடிப்பு மற்றும் டான்ஸ் பயிற்சிகளிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Jovita Livingston photos
Photo Credit:

லிவிங்ஸ்டன்: நடிகர் லிவிங்ஸ்டன் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங், கேப்டன் பிரபாகரன், அறுவடை நாள், ஒரு வீடு இருவாசல் போன்ற படங்களில் நடித்தார். இவர் ஹீரோவாக சுந்தர புருஷன், என்புருஷன் குழந்தைமாதிரி திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இவர் ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா என்கிற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

Read more about: photos படங்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X