வீட்டுல ரொம்ப போர் அடிக்குது.. என்னோட விளையாட வறீங்களா.. ரசிகர்களுக்கு கொக்கிப் போட்ட பிரபல நடிகை!

சென்னை: இந்த லாக்டவுனில் தனக்கு ரொம்ப போர் அடிப்பதாகவும், தன்னுடன் விளையாட ரசிகர்கள் தயாரா என நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App

15 வயதில் 'சாந்த் சா ரோஷன் சேஹ்ரா' எனும் பாலிவுட் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

கைகளை கழுவுங்க

கைகளை கழுவுங்க

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நடிகர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா, தனது ரசிகர்கள் கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும், கொரோனாவில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

யோகா செய்து அசத்தல்

யோகா செய்து அசத்தல்

பின்னர், தனது தோட்டத்தில் யோகா செய்வது, வீட்டு அறையில் யோகா செய்வது என வித விதமான வீடியோக்களை பதிவிட்டு, இந்த லாக்டவுனில் எப்படி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை தனது ரசிகர்களுக்கு நடிகை தமன்னா டிப்ஸாக சொல்லி வந்தார். ஆனாலும், லாக்டவுன் போரிங் அவரை சும்மா விடவில்லை.

பில்லோ சேலஞ்ச்

பில்லோ சேலஞ்ச்

கவர்ச்சி பக்கம் திரும்பினால் தான் ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் திருப்ப முடியும் என நினைத்த நடிகை தமன்னா, ஆடைகள் ஏதும் அணியாமல், வெறும் தலையணையை மட்டும் ஆடையாக கொண்டு பில்லோ சேலஞ்ச் செய்து அசத்தினார். உலகம் முழுவதும் வைரலான அந்த சவாலை முன்னணி நடிகையான தமன்னா செய்ததை பார்த்து பலரும் வாயை பிளந்தனர்

விளையாட வாங்க

விளையாட வாங்க

இந்நிலையில், தற்போது தமன்னா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "எப்படி தான் இந்த லாக்டவுனை சமாளிக்கிறீங்களோ தெரியலை.. எனக்கு ரொம்ப போர் அடிக்குது.. வீட்டுலயே சும்மா இருக்க முடியல.. அந்த போரிங்க சமாளிக்க ஆன்லைன் கேம் விளையாடுறேன்.. நீங்களும் என்னோட விளையாட வாங்க, நாம விளையாடலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வீட்டில் இருந்தே சம்பாதிக்க

வீட்டில் இருந்தே சம்பாதிக்க

MPL எனும் ஆன்லைன் கேம் ஒன்றுக்கு விளம்பரம் செய்து வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் யுக்தியை நடிகை தமன்னா கையாண்டு வருகிறார். சமீபத்தில் பல நடிகைகளும் ஹாட்ஸ்டார் + டிஸ்னி இணைந்ததை வீட்டிலேயே விளம்பரம் செய்து இந்த லாக்டவுனில் கொஞ்சம் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: tamannaah தமன்னா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X