இந்த லாக்டவுனை இதுக்குத்தான் பயன்படுத்தறேன்.. 'தாராள பிரபு' ஹீரோயின் என்ன சொல்றார் பாருங்க..!
சென்னை: இந்த லாக்டவுன் நேரத்தை இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார், நடிகை தன்யா ஹோப்.
Recommended Video
தமிழில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த படம் 'தடம்'. இது ஹிட்டானது.
இந்த படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், தன்யா ஹோப். பெங்களூரைச் சேர்ந்தவர்.

தாராள பிரபு
தெலுங்கில், அப்பாட்லோ ஒகடுன்டேவடு என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பிறகு, படேல் எஸ்.ஐ.ஆர், பேப்பர் பாய், டிஸ்கோ ராஜா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் அமர், காக்கி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், ஹரீஷ் கல்யாண், விவேக் நடித்த தாராள பிரபு படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

லாக்டவுன்
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்துகொண்டிருக்கும் தன்யா, இந்த குவாரைன்டைன் காரணமாக, எல்லோரையும் போல வீட்டில் இருக்கிறார். இந்த லாக்டவுன் தனக்குச் சில பாடங்களை கற்றுத் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, சில நாட்கள் உற்சாகமாக இருக்கின்றன. சில நாட்கள் படுக்கையில் இருந்து எழ முடியாமலும் இருக்கிறேன்.

ஆங்கில வகுப்பு
ஒவ்வொரு நாளும் பயங்கரமான செய்திகளுடன் எழுகிறோம். இதனால் சில நாட்கள் எதிர்மறையாகவும் உணர்கிறேன். ஆனால் என் குடும்பம் என்னுடன் இருக்கிறது என்பது என் அதிர்ஷ்டம். அவர்கள் என்னை அந்த சிந்தனையில் இருந்து வெளியே இழுத்து விடுகிறார்கள். சில நேரம் எனது சகோதரர் மகன்களுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கிறேன்.

குடும்ப நேரம்
2016 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வீட்டில் இருப்பதை வித்தியாசமாக உணர்கிறேன். என் அம்மா, ஓய்வுக்காக கிடைத்த இந்த நேரம் நல்லது என்கிறார். ஆனால், செட்டில் நடக்கும் விஷயங்களை இழப்பதாகவும் உணர்கிறேன். இருந்தாலும் இதை எனது குடும்பத்துக்கான நேரமாக நினைக்கிறேன், அதனால் அதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











