ஒண்ணும் குடி முழுகி போகாது.. இது ஒண்ணும் எலி ரேஸ் கிடையாது.. யாருக்கு சொல்கிறார் அமலா பால்?

சென்னை: இந்த லாக்டவுனில் ஓஷோ உள்ளிட்டோரின் புத்தகங்களை படித்து வரும் நடிகை அமலா பால் தற்போது தத்துவார்த்தமான போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

கிட்டத்தட்ட 2 மாத கால லாக்டவுனில் ஏகப்பட்ட நடிகைகள், சமையல் செய்வதும், புத்தகம் படிப்பதும், ஓவியம் வரைவதும், ஆன்லைனில் பெல்லி நடனம் கற்பதும் என பல விதமான வேலைகளை செய்து வருகின்றனர்.

உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் என வீட்டை ஜிம்மாக மாற்றி வவ்வாலாக அந்தரத்தில் தொங்கும் புகைப்படங்கள் எல்லாம் வந்து குவியும் நிலையில் அமலா பால் இப்படியொரு போஸ்ட் போட்டுள்ளார்.

ஒண்ணும் குடி முழுகி போகாது

ஒண்ணும் குடி முழுகி போகாது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி லாக்டவுனை நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் போட்டிருக்கின்றன. இந்த லாக்டவுன் நேரத்தில் நீங்கள் புதிதாக ஒன்றையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் கொஞ்சமும் கவலை படாதீங்க, ஒண்ணும் குடி முழுகி போகாது என அமலா பால் தற்போது ஷேர் செய்துள்ள பதிவில் இருக்கிறது.

எலி ரேஸ்

எலி ரேஸ்

வாழ்க்கை என்றாலே எல்லா நேரமும் பந்தயமாகவே அதை பார்க்கும் மனோபாவத்தில் இருந்து மனிதர்கள் மாற வேண்டும். பிரெஷர் குக்கர் வாழ்க்கையிலிருந்து முதலில் வெளியே வாருங்கள். லாக்டவுனில் புதிதாக ஒரு புத்தகத்தையும் படிக்கவில்லையா? எந்தவொரு புதிய வேலையையும் செய்யவில்லையா? கவலை படாதிங்க இது ஒண்ணும் எலி ரேஸ் கிடையாது எனக் கூறியுள்ளார்.

இது அதற்கான நேரமல்ல

இது அதற்கான நேரமல்ல

ஒருவர் ஒன்றை செய்கிறார், நாமும் அதனை செய்ய வேண்டும் என மக்கள் நினைத்து, அதன் பின்னாலே ஓட வேண்டாம். இது ஒன்றும் உற்பத்தி பெருக்குவதற்கான நேரம் அல்ல, ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ணுங்க என அமலா பால் ஷேர் செய்துள்ள ஒரு தத்துவார்த்தமான போஸ்ட் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஒண்ணுமே கத்துக்கல

ஒண்ணுமே கத்துக்கல

அமலா பாலின் இந்த பதிவை பார்த்த பலரும் பாராட்டி கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். உண்மையான வார்த்தைகள் என்றும், இந்த லாக்டவுனில் நானும் வெட்டியாத்தான் இருந்தேன் என்றும், அப்பாடா யாருமே இப்படி சொல்லலயேன்னு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க என்றும் உங்க போஸ்ட்டை ஷேர் செய்ததை விட நான் ஒண்ணும் கத்துக்கல மேடம் என ஐஸ் வைத்தும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

நிறைய கத்துக்கிட்டீங்க

நிறைய கத்துக்கிட்டீங்க

ஆனால், இந்த லாக்டவுனில் நீங்கள் ரொம்பவே கத்துக்கிட்டீங்க போல, அடிக்கடி தத்துவமா பொழியுறீங்க, ஓஷோ புக்ஸ் படிக்கிறீங்க, வீட்டிலேயே பார்ட்டி பண்றீங்க, வித விதமா போட்டோ எடுத்துப் போட்டு லைக்குகளை அள்ளுறீங்க என சில நெட்டிசன்கள் அமலா பாலையும் அவரது கருத்தையும் சேர்த்தே ஓட்டியும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X