‘உசுரே’ நீதானே.. லியோ பட நடிகைக்காக லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் பார்த்த வேலை.. இனிமே ஹீரோயின்!

சென்னை: பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தொடர்ந்து பல பிக் பாஸ் பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், கடைசியாக அந்த ஜாக்பாட் ஜனனிக்கு அடித்தது.

விஜய்யின் காபி ஷாப்பில் நடக்கும் அந்த அசுரத்தனமான சண்டைக்காட்சியில் ஜனனி மற்றும் சாண்டி போர்ஷன் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. "தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும் சண்டையே வந்ததில்லை" பாடல் பேக்கிரவுண்டில் ஓட ஜனனியை தகாத முறையில் சாண்டி டார்ச்சர் பண்னும் காட்சிகளில் செம போல்டாக நடித்திருப்பார்.

அந்த படம் முடிந்த உடனே அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தற்போது அவருக்கு ஹீரோயினாக 'உசுரே' எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

lokesh kanagaraj shruti haasan

இன்னொரு பிக் பாஸ் ஹீரோயின்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இதுவரை ஏகப்பட்ட நடிகைகள் ஹீரோயினாக மாறியுள்ளனர். ரைசா வில்சன், லாஸ்லியா, ஷிவானி நாராயணன் வரிசையில் தற்போது ஜனனியும் ஹீரோயினாக மாறியிருக்கிறார். அவர் நடிக்கும் 'உசுரே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

lokesh kanagaraj shruti haasan

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து: லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து ஆல்பம் பாடலில் நெருக்கமாக நடித்திருந்தார். ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கும் கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் ஒன்றாக இணைந்து ஜனனியின் 'உசுரே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பிக் பாஸ் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

lokesh kanagaraj shruti haasan

உசுரே படம்: ஸ்ரீகிருஷ்ணா புரொடக்‌ஷன் தயாரிப்பில் நவீன் டி. கோபால் இயக்கத்தில் உருவாகி வரும் உண்மை சம்பவத்தை மையப்படுத்திய காதல் கதையில் ஜனனி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். பைக்கில் ஹீரோவுக்குப் பின் சுடிதார் அணிந்து அமர்ந்து செல்லும் செம ரொமான்ட்டிக்கான போஸ்டரை லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளனர். மேலும், விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் மற்றும் இயக்குநர் நித்திலன் சாமிநாதனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ஜனனியை வாழ்த்தியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

lokesh kanagaraj shruti haasan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X