பிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் பிரெண்ட்ஷிப் செப்டம்பர் 17ல் ரிலீஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை லாஸ்லியா இப்பொழுது கதாநாயகியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருந்த ஹர்பஜன் சிங் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கல்லூரி கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

ஃபேவரைட் போட்டியாளராக
பிக் பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகை லாஸ்லியாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 3ல் அனைவரது ஃபேவரைட் போட்டியாளராக வலம் வந்த லாஸ்லியா அதில் மிகச் சிறப்பாக விளையாடி பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். கவின், சாண்டி மாஸ்டர், தர்ஷன், முகின்ராவ் லாஸ்லியா என பிக் பாஸ் வீட்டுக்குள் வி ஆர் த பாய்ஸ்ஸு என்ற பாடலுடன் இவர்கள் வலம் வந்தது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

கதாநாயகியாக அறிமுகம்
செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா இப்பொழுது படங்களிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா இணைந்து இயக்கியிருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மிரட்டலான டிரைலர்
கல்லூரி கதைக்களத்தை பின்புலமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து சென்ற வாரம் இதன் மிரட்டலான டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

செப்டம்பர் 17 ரிலீஸ்
சென்ற ஆண்டே ரிலீசுக்கு தயாராக பிரெண்ட்ஷிப் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் பிரெண்ட்ஷிப் திரைப்படம் இப்பொழுது திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி பிரெண்ட்ஷிப் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடித்து வருகிறார் .


Click it and Unblock the Notifications











