லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
சென்னை: இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரம்பித்த பட வாய்ப்புகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே போகிறது.
பிக் பாஸ் தர்ஷனுடன் அடுத்த பட அறிவிப்பு இன்று வெளியானதும் #Losliya ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரிய மேடை
சின்னத்திரை கலைஞர்களை அதிகமாக வெள்ளித்திரைக்கு கொண்டு வரும் பெரிய மேடையாக விஜய் டிவியும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியும் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றன. சந்தானம், சிவகார்த்திகேயன், டிடி, ரோபோ சங்கர், ரியோ ராஜ், தர்ஷன், ஜேக்குலின், ரைசா வில்சன், ஆரவ், கவின், லாஸ்லியா இப்போ பாலாஜி முருகதாஸ், ஷிவானி, ரம்யா பாண்டியன் என ஏகப்பட்ட பேருக்கு பெரிய பிளாட்ஃபார்மாக விஜய் டிவி இருந்து வருகிறது.

லக்கி லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் கிடைத்தது. தொடர்ந்து, ஆரியுடன் ஒரு படத்திலும், இன்னும் சில படங்களிலும் புக் செய்யப்பட்ட லாஸ்லியா, தற்போது தர்ஷனுக்கு ஜோடியாகி உள்ளார்.
குத்து விளக்கு
குத்து விளக்கு போல அழகா இருக்கும் நடிகை லாஸ்லியா, தனது புதிய படமான கூகுள் குட்டப்பன் படத்தின் பட பூஜையில் குத்து விளக்கு ஏற்றும் வீடியோ வேற லெவலில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக் தான் கூகுள் குட்டப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டித் தெரிய
ஹோம்லி லுக்கில் அசர வைக்கும் நடிகை லாஸ்லியா, சமூக வலைதளங்களில் சமீபத்தில் முட்டித் தெரிய வெளியிட்ட கிளாமர் புகைப்படம் லாஸ்லியா ரசிகர்களை கிறங்கடித்தது. இதுவரை 4 படங்களில் லாஸ்லியா கமீட் ஆகி உள்ளார். வெகு விரைவில் அவர் நடிப்பில் உருவாகி வரும் ஒவ்வொரு படமும் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்ய உள்ளது.
நடந்து வரும் அழகே தனி
நடிகை லாஸ்லியா இன்று சென்னையில் நடைபெற்ற கூகுள் குட்டப்பன் பட பூஜைக்கு நடந்து வந்து கலந்து கொண்ட வீடியோவையும் சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வர்ணித்து வருகின்றனர். மேலும், #Losliya என்கிற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











